இந்திரா கேண்டீன் சீரமைப்பு

பெங்களூர், செப்.20-
பெங்களூர் மாநகராட்சியின் கீழ் உள்ள இந்திரா கேன்டீன் பொழுது பார்க்கும் பணி தொடங்கியுள்ளது.
அனைத்து பணிகளும் இன்னும் ஒரு மாதத்தில் முடிவடையும் .
கர்நாடக அரசின் உத்தரவுப்படி மாநகராட்சிக்கு கீழ் உள்ள இந்திரா கேண்டின்களை புதிய தோற்றம் அளிக்கும் பணிகள் துவங்கி உள்ளன.பெங்களூரில் 100 இந்திரா கேண்டீன் பழுது பார்க்கும் பணிகள் கிட்டத்தட்ட முடிந்து விட்டது. சமையலறையில் மோசமான நிலை, உணவு உண்ணும் இடத்தில் குளறுபடி, சாப்பாடு பகுதியில் குளறுபடி, வடிக்கால் பிரச்சனை, குடிநீர் குழாய் உள்பட பல சீரமைப்பு பணிகள் முடிக்கப்பட்டு வருகின்றன.கேண்டினில் உணவு வழங்குவதுடன் பழுது நீக்கும் பணியும் செய்யப்பட்டுள்ளது.
மேலும் 69 இந்திரா கேண்டின்கள் பழுது பார்க்கப்பட உள்ளன.இதற்கான டெண்டர்கள் நடைமுறையில் இருந்து வருகிறது. இன்னும் ஒரு மாதத்தில் அனைத்து இந்திரா கேண்டீன்களும் எந்த பிரச்சனையும் இல்லாமல் செய்து தரப்படும்.ஒவ்வொரு வார்டுக்கும் தலா ஒரு கேண்டீன் அமைக்கப்படுகிறது. கூடுதலாக 56 கேண்டீன்கள் ஏற்படுத்த அரசுக்கு கடிதம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.உணவு பட்டியலையும் சமர்ப்பித்துள்ளோம் என்று மாநகராட்சியின் சிறப்பு ஆணையர் திரிலோக சந்தர் தெரிவித்துள்ளார்.