இந்திரா பிறந்த தினம்: சோனியா கார்கே மலரஞ்சலி

புதுடெல்லி, நவம்பர் 19 – முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் பிறந்த நாளை முன்னிட்டு டெல்லி சக்திஸ்தல்லில் உள்ள அவரது நினைவிடத்திற்கு ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் தலைவர் சோனியா காந்தி மற்றும் காங்கிரஸ் கட்சி தலைவர் மல்லிகார்ஜூன கார்கே ஆகியோர் இன்று நேரில் சென்று மலர்களை தூவி அஞ்சலி செலுத்தினர். இதேபோன்று ராஜஸ்தான் முதல்-மந்திரி
அசோக் கெலாட் மற்றும் மூத்த காங்கிரஸ் தலைவர் புபீந்தர் ஹூடா ஆகியோரும் நினைவிடத்தில் மலர்களை தூவி அஞ்சலி செலுத்தினர்.

மராட்டியத்தின் புல்தானா மாவட்டத்தில் காங்கிரஸ் பாதயாத்திரையில் கலந்து கொண்டுள்ள காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, மறைந்த முன்னாள் பிரதமர் இந்திரா காந்திக்கு மலர்களை தூவி அஞ்சலி செலுத்தியுள்ளார்.