இந்தி எழுத்துக்கள் மீது கருப்பு மை பூச்சு

பெங்களூர் : ஜூன். 19 – நகரின் மைசூர் வீதியில் நிறுவப்பட்டிருந்த நூற்றுக்கணக்கான ஹிந்தி பேனர்களுக்கு கருப்பு மசி பூசி கர்நாடக ரக்ஷனே வேதிகே தொண்டர்கள் இன்று மாலை போராட்டம் நடத்தினர். பிரதமர் நரேந்திர மோதி மைசூருக்கு விஜயம் செய்ய உள்ள நிலையில் மைசூரு வீதியில் அமைச்சர் முனிரத்ன நாய்டு மற்றும் அவருடைய ஆதரவாளர்கள் ஹிந்தி மொழி பதாகைகளை வைத்திருந்தனர். இது குறித்து தகவல் அறிந்த உடனேயே கரவே தலைவர் டி ஏ நாராயணகௌடா தலைமையிலான இளைஞர் பிரிவு தலைவரான டி ஏ தர்மராஜ் தலைமையில் கரவே தொண்டர்கள் பிளெக்ஸ் பதாகைகள் மீது கருப்பு மசி பூசினர் . இந்த நேரத்தில் போலீசார் தடுத்தும் கன்னட இளைஞர்கள் ஹிந்தி பிலெக்ஸுகள் மீது கருப்பு மசி பூசினர் . கரவே இளைஞர் பிரிவு மாவட்ட தலைவர் கார்த்திக் , பத்மநாப நகர் தொகுதி தலைவர் நிதிஷ் மனு கௌடா உட்பட பல பிரமுகர்கள் இந்த நடவடிக்கையில் பங்கு கொண்டிருந்ததுடன் கர்நாடகாவில் ஹிந்தி திணிப்பை எந்த விதத்திலும் அனுமதிக்கமாட்டோம் என்றும் எச்சரித்தனர்.