இந்தி ஒற்றுமை பயணம் புதிய சரித்திரம்

புது டெல்லி : செப்டம்பர். 8 – பாரத் ஜோடோ யாத்திரை காங்கிரஸ் கட்சியின் மறு பிறப்பிற்கு முக்கிய அங்கம் வகிக்கும் என காங்கிரஸ் தேசிய தலைவி சோனியா காந்தி நம்பிக்கை தெரிவித்துள்ளார். இந்த யாத்திரை நாட்டின் சரித்திரத்தில் ஒரு மாற்றத்தை கொண்டுவரும் கணங்களாக உள்ளன எனவும் சோனியா தெரிவித்துள்ளார். தன் மகன் ராகுல் காந்தி பாரத் ஜோடோ யாத்திரையின் இரண்டாவது நாள் நடை பயணத்தை கன்னியாகுமரியின் அகத்தீஸ்வரத்திலிருந்து துவங்குவதற்கு முன்னர் சோனியா காந்தி இந்த தகவலை வெளியிட்டுள்ளார். கூடுதல் உடல் நல சோதனைக்காக சோனியா இத்தாலியில் தங்கியிருப்பதுடன் தான் இந்த பாதயாத்திரையில் பங்கு கொள்ள முடியாதது குறித்து வருத்தம் தெரிவித்துள்ளார். இந்த பாதயாத்திரையில் நேரில் கலந்து கொள்ள இயலாத சோனியா வெறும் தொண்டர்களுக்கு உற்ச்சாகத்தை கொடுத்துள்ளார். வாருங்கள் , அனைவரும் ஒன்று சேர்ந்து முன்னடக்க உறுதி கொள்வோம் என சோனியா அழைப்பு விடுத்துள்ளார்.