இந்தி திணிப்பு நிகில் குமாரசாமி கண்டனம்

பெங்களூர்: ஜூன். 15 – மத்திய அரசின் ஹிந்தி திணிப்பிற்கு கன்னடிகர்கள் பணியக்கூடாது . இது எதிர்காலத்தில் நம் நிலம் , நீர் , ஆகியவற்றின்மீது பெரும் விளைவுகளை ஏற்படுத்தும் என ம ஜ தா இளைஞர் பிரிவு மாநிலத்தலைவர் நிகில் குமாரசுவாமி கூறியுள்ளார். ம ஜ தா மாநில அலுவலகம் ஜெ பி பவனில் இன்று ம ஜ தா இளைஞர் பிரிவு மாநில தலைவர் நிகில் குமாரசாமி தலைமையில் சமூக தொண்டர்கள் ஒருங்கிணைப்பு கூட்டத்திற்க்கு முன்னர் செய்தியாளர்களிடம் பேசிய நிகில் மாநிலத்தில் நடந்து வரும் பி ஜே பி நிகழ்ச்சிகளில் ஹிந்தி மொழியே அதிகம் பயன்படுத்தப்படுகிறது. மாநில மொழியான கன்னடத்தை இவர்கள் பயன்படுத்துவதில்லை. இது பெரிய துரதிர்ஷ்ட்டம் . மைசூருக்கு பிரதமர் நரேந்திர மோதி விஜயம் செய்ய உள்ளார். அங்கும் கூட ஹிந்தி விளம்பர பதாகைகள் பயன் படுத்தி கன்னடத்தை இருட்டடிப்பு செய்துள்ளனர். இப்போதாவது கன்னடிகர்கள் விழித்தெழவேண்டும். தவிர இன்றைய கூட்டத்தில் நிகில் சமூக தகவல் வலைதளத்தை நல்ல வளர்ச்சிகரமான விதத்தில் யாரும் பயன் படுத்திக்கொள்ளலாம் என நிகில் தெரிவித்துள்ளார்.