பெங்களூரு, செப்.30-
கர்நாடக மாநிலத்தில் முற்போக்கு இலக்கிய எழுத்தாளர்களுக்கு கொலை மிரட்டல் விடுத்து கடிதம் எழுதிய இந்து அமைப்பு தலைவர் கைது செய்யப்பட்டார். அவரது பெயர் சிவாஜி ராவ். இவர் தாவணக்கரே மாவட்டத்தில் தீவிர இந்து ஆர்வலராக செயல்பட்டு வந்தார். கர்நாடக மாநிலத்தில் இந்து மத அடிப்படை குறித்து கேள்வி எழுப்பி எழுதி வந்த முற்போக்கு எழுத்தாளர்களுக்கு இவர் கொலை மிரட்டல் விடுத்து கடிதம் எழுதி இருந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது இவர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர் இந்த நிலையில் சிசிபி போலீசார் இவரை கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். முற்போக்கு இலக்கிய எழுத்தாளர்களை கொலை செய்ய வேண்டும் என்ற எண்ணம் தனக்கு இல்லை என்றும் அவர்கள் தொடர்ந்து இந்து மதம் குறித்து அவதூறாக எழுதி வந்த காரணத்தால் அதை தடுக்கும் நோக்கில் கடிதம் எழுதவும் இவர் போலீஸ் விசாரணையில் கூறியதாக தெரிகிறது. முன்னதாக கர்நாடக முற்போக்கு எழுத்தாளர்கள் முதல்வர் சித்ராமையாவை சந்தித்து தங்களுக்கு கொலை மிரட்டல் கடிதம் வருவதாகவும் தங்கள் உயிருக்கு ஆபத்து என்றும் புகார் கூறியிருந்தனர். தற்போது கைது செய்யப்பட்டுள்ள குற்றவாளி இரண்டு ஆண்டுகளாக கொலை மிரட்டல் கடிதம் எழுதி வந்ததாக தெரிகிறது
5 எழுத்தாளர்களுக்கு 7 மிரட்டல் கடிதங்கள் எழுதியதாக குற்றம் சாட்டப்பட்டவர் ஒப்புக்கொண்டு உள்ளார் எனினும், இந்த கடிதம் தவறான நோக்கத்துடன் எழுதப்படவில்லை. இலக்கியவாதிகள் இந்து மதத்திற்கு எதிராகப் பேசி வந்தனர். அதனால் தான் இந்த மிரட்டல் கடிதத்தை எழுதியுள்ளேன் என்று கூறியுள்ளார்.
இதுகுறித்து மாநகர போலீஸ் கமிஷனர் பி.தயானந்த் கூறுகையில், சிசிபி போலீசாரால் கைது செய்யப்பட்ட சிவாஜி ராவ், ஹிந்து ஆதரவு அமைப்பில் அடையாளம் காணப்பட்டு செயல்பட்டு வருவதாகவும், பேசுபவர்களை குறிவைத்து சட்ட விரோத செயல்களில் ஈடுபட்டு வருவதாகவும் தெரிவித்தார். .
குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது சஞ்சய்நகர், கோட்டூர், சித்ரதுர்கா, ஹரோஹள்ளி-2 எப்ஐஆர், பசவேஷ்வர் நகர்-2 உள்ளிட்ட பல்வேறு ஸ்டேஷன்களில் 8 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.
எழுத்தாளர்வீரபத்ரப்பா கோட்டூர் காவல் நிலையத்தில் வழக்குப் பதிந்திருந்தார். சித்ரதுர்காவில் எழுத்தாளர் பி.எல்.வேணு, ஹரோஹள்ளி காவல் நிலையத்தில் பஞ்சாகெரே ஜெயபிரகாஷ், சஞ்சய்நகர் காவல் நிலையத்தில் பி.டி. வசுந்தரா பூபதி மீது பசவேஷ்வர் நகர் காவல் நிலையத்தில் லலிதா நாயக் புகார் செய்து இருந்தனர்.
இந்த வழக்கு தீவிரமாக எடுத்துக்கொள்ளப்பட்டு கடந்த ஆகஸ்ட் மாதம் சிசிபிக்கு மாற்றப்பட்டது.
இந்தக் கடிதம் அனைத்தையும் அவர் தனியாக எழுதியது உறுதியானது. பல்வேறு தபால் நிலையங்களில் இருந்து கடிதங்கள் அனுப்பப்பட்டன. தற்போது கைது செய்யப்பட்டுள்ள நபர் தனது பெயரை குறிப்பிடாமல் பல்வேறு தபால் நிலையங்களில் இருந்து இந்த கொலை மிரட்டல் கடிதத்தை முற்போக்கு எழுத்தாளர்களுக்கு எழுதி அனுப்பி இருந்தார் இதை யார் எழுதியது என்பதை கண்டுபிடிக்க முடியாமல் போலீசார் திணறி வந்தனர் என்றாலும் இது குறித்து தீவிர விசாரணை நடத்தி கடிதங்களை தடயவியல் சோதனைக்கு அனுப்பி அதை யார் எழுதியது என்பதை கண்டுபிடித்தனர். இது தொடர்ந்து முற்போக்கு எழுத்தாளர்களுக்கு கொலை மிரட்டல் கடிதம் எழுதிய வடக்கில் இந்து அமைப்பு தலைவர் கைது செய்யப்பட்டு இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.