இந்து மத சர்ச்சை விஸ்வரூபம்

பெங்களூர்: நவம்பர். 9 – இந்து என்பது ஆபாச வார்த்தை என மாநில காங்கிரஸ் கட்சி செயல் தலைவர் சதீஷ் ஜாரகிஹோலி கூறியிருப்பதை கண்டித்து பி ஜே பி மாநிலம் முழுக்க போராட்டங்கள் நடத்தி சதீஷ் ஜாரகிஹோலிக்கு எதிராக குற்றவியல் வழக்கு பதிவு செய்ய வற்புறுத்தியுள்ளது . கே பி சி சி செயல் தலைவர் சதீஷ் ஜாரகிஹோலி நேற்று முன் தினம் ஹிந்து என்ற வார்த்தைக்கு பெர்ஷியன் மொழியில் அசிங்கமான பொருள் உள்ளது என பேசியுள்ளதற்கு பெருமளவில் எதிர்ப்புகள் கிளம்பியுள்ள நிலையில் இவருடைய இந்த பேச்சை பி ஜே பி தேர்தல் ஆயுதமாக பயன்படுத்தும் நோக்கில் ஜாரகிஹோலிக்கு எதிராக பெங்களூர் உட்பட மாநிலத்தின் அனைத்து மாவட்ட மையங்களிலும் எதிர்ப்பு போராட்டங்கள் மற்றும் பேரணிகள் நடத்தப்பட்டுள்ளன. அதே போல் சமூக வலைதளங்களிலும் ஹிந்து விரோதி காங்கிரஸ் என்ற வாசகத்தை பயன்படுத்தி பிரசாரங்களை துவங்கியுள்ளன. இத்துடன் சதீஷ் ஜாரகிஹோலிக்கு எதிராக போலீஸ் நிலையத்தில் குற்றவியல் புகார் அளிக்கவும் பி ஜே பி முற்பட்டுள்ளது . ஹிந்து என்பது அசிங்கமான வார்த்தை என்ற சதீஷ் ஜாரகிஹோலியின் பேச்சை கண்டித்து மாநிலம் முழுக்க இன்று போராட்டங்கள் நடத்த வேண்டும் என்ற மாநில பி ஜே பி தலைவர் நளீன் குமார் கட்டீல் தெரிவித்த யோசனையின் பேரில் பி ஜே பியின் அனைத்து மாவட்ட மற்றும் தாலூகா பிரிவுகள் அந்தந்த மையங்களில் முக்கிய பிரமுகர்கள் மற்றும் தொண்டர்கள் அந்தந்த மையங்களில் போராட்டங்கள் நடத்தினர். இந்த போராட்டங்களில் பி ஜே பி எம் எல் ஏக்கள் , மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டு சதீஷ் ஜாரகிஹோலி மற்றும் காங்கிரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பி ஜாரகிஹோலி தன் எம் எல் ஏ பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் , தவிர அவருக்கு எதிராக குற்றவியல் வழக்கை பதிவு செய்யமாறும் வற்புறுத்தினர். பெங்களூரில் மைசூர் வங்கி ரவுண்டானாவில் பி ஜே பி தொண்டர்கள் இன்று சதீஷ் ஜாரகிஹோலியின் பேச்சை கண்டித்து மாபெரும் போராட்டம் நடத்தினர். இந்த எதிர்ப்பு போராட்டத்தில் சதீஷ் ஜாரகிஹோலி மற்றும் காங்கிரசுக்கு எதிராக ஒழிக கோஷங்களை பி ஜே பியினர் கூவினர். தவிர ஹிந்து விரோதி காங்கிரஸ் என எழுதியிருந்த பதாகைகளையும் தூக்கி பிடித்திருந்தனர். சமூக வலைதளங்களிலும் சதீஷ் ஜாரகஹோலிக்கு எதிராக அவருடைய பேச்சை கண்டித்து பிரசாரங்கள் செய்து வருவதுடன் ஹிந்து விரோதி காங்கிரஸ் என்ற வாசகத்தையும் பிரசாரம் செய்து வருகின்றனர்.