
டெல்லி: ஜூன் 10-
மேகாலயாவுக்கு தேனிலவு சென்ற இடத்தில் கொலை செய்யப்பட்ட இந்தூர் தொழிலதிபர் ராஜா ரகுவன்ஷிக்கு தேனிலவு செல்லவே விருப்பமில்லை என்றும் புதுமனைவி கட்டாயப்படுத்தியதால்தான் அவர் சென்றார் என்றும் ராஜாவின் தாய் பகீர் தகவலை அளித்துள்ளார். இதுகுறித்து ராஜாவின் தாய் உமா கண்ணீர் மல்க கூறியிருப்பதாவது: திருமணமான உடனேயே தேனிலவுக்கு செல்ல என் மகன் விரும்பவில்லை. ஆனால் தனது மனைவி சோனம், தேனிலவுக்காக மேகாலயாவுக்கு டிக்கெட் புக் செய்ததால் எனது மகன் புறப்பட்டுச் சென்றார்.
தேனிலவுக்குச் சென்ற இடத்திலேயே என் மகனை கொன்று விட சோனம் திட்டம் தீட்டி விட்டார். அதனால்தான் ரிட்டர்ன் டிக்கெட்டையே எடுக்கவில்லை. இந்த திருமணம் பெரியவர்களால் நிச்சயிக்கப்பட்ட திருமணம். எங்களுடன் சோனம் நல்லபடியாகவே நடந்து கொண்டார். அவரது நடத்தையில் எந்த சந்தேகமும் இல்லை. குவஹாத்தி ராஜாவும் சோனமும் குவஹாத்தியில் உள்ள காமக்யா கோயிலுக்கு செல்ல திட்டமிட்டு திடீரென மேகாலயாவுக்கு மாற்றிவிட்டனர். “திருமணமான உடனேயே மேகாலயாவுக்கு ஹனிமூன் செல்ல எனது மகனுக்கு விருப்பமில்லை. டிக்கெட் புக் செய்துவிட்டதால் செல்வதாக” அவரே என்னிடம் தெரிவித்தார். மனைவியுடன் செல்ல அட்வைஸ் நானும் உன் மனைவி ஆசையாக டிக்கெட்டை புக் செய்துவிட்டார். எனவே நீ அவருடன் செல்ல வேண்டும் என தெரிவித்தேன். மேலும் எனது மகன் , என்னிடம், “மேகாலயாவில் 6 முதல் 7 நாட்கள் வரை தங்கவிருப்பதால் சோனம் ரிட்டர்ன் டிக்கெட்டை புக் செய்யவில்லை” என்றும் என் மகன் தெரிவித்தார். சோனம் எனது மகனை விரும்பியிருந்தால் அவரை சாக விட்டிருக்க மாட்டார். ராஜ் குஷ்வாலா யாரென எனக்கு தெரியாது என ராஜாவின் தாய் கண்ணீர் மல்க தெரிவித்தார்.