இந்த ஆண்டின் முதல் சந்திர கிரகணம் – கர்நாடகத்தில் பார்க்க முடியுமா?

பெங்களூர் மார்ச் 23இந்த ஆண்டின் முதல் சந்திர கிரகணம் ஹோலி பண்டிகை நாளான மார்ச் 25 ஆம் தேதிய‌ன்று நடைபெற உள்ளது. அடுத்த சந்திர கிரகணம் செப்டம்பர் 18 ஆம் தேதி நிகழ உள்ளது. இந்தியாவில் சந்திர கிரகணம் மற்றும் சூரிய கிரகணம் ஆகிய இரண்டும் பல சிறப்பு மற்றும் முக்கியத்துவத்தைக் கொண்டுள்ளன.சந்திர கிரகணம் என்பது ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக மனிதர்களை கவர்ந்த ஒரு வான நிகழ்வு. சந்திரனுக்கும் சூரியனுக்கும் இடையில் பூமி கடந்து செல்லும் போது சந்திர கிரகணம் ஏற்படுகிறது.நிகழாண்டு மார்ச் 25 ஆம் தேதிய‌ன்று நிகழும் கிரகணம் ஒரு லேசான அல்லது பகுதி சந்திர கிரகணமாக இருக்கும். சந்திரகிரகணம் லேசானது என்பதால், சந்திரனின் நிழல் மிகவும் நுட்பமானதாக இருக்கும். எனவே இந்த கிரகணம் இந்தியாவில், குறிப்பாக கர்நாடகத்தில் கண்ணுக்கு புலப்படாமல் போகலாம்.இந்த சந்திர கிரகணம் இந்திய நேரப்படி (IST) காலை 10.24 மணிக்கு தொடங்கி, பிற்பகல் 12.43 மணிக்கு உச்சமாகி, பிற்பகல் 3.01 மணிக்கு முடிவடையும்.