இந்த 10 விதமான கனவுகள் வந்தால்.. நீங்கள் நிஜமாகவே அதிர்ஷ்டசாலி

சென்னை: ஜூலை 2
கனவு சாஸ்திரங்களில் சொல்லப்பட்டுள்ள விஷயங்கள் இன்றும்கூட பிரதானமாக பார்க்கப்பட்டு வருகிறது. அந்தவகையில், ஒருசிலவற்றை பார்ப்போம். கனவுகளுக்கான பலன்கள் பழமையான சாஸ்திரங்களில் உள்ளது.. நாம் காணும் ஒவ்வொரு கனவுக்கும் ஒவ்வொரு பலன் உண்டு என்கிறது கனவு சாஸ்திரம்.. ஆனால், அந்த பலன்கள் உடனுக்குடன் தெரிய வாய்ப்பில்லையாம்..
கனவு பலன்கள்: உதாரணமாக நள்ளிரவில் 1 மணிக்கு கனவு கண்டால், அதன் பலன் ஒரு வருடம் கழித்தே கிடைக்குமாம். 2 மணிக்கு கனவு கண்டால் 3 மாதத்தில் பலன் கிடைக்கும்.. அதிகாலையில் வரும் கனவுதான் உடனே பலிக்குமாம்.. அந்தவகையில், கனவில் நாம் காணும் உருவங்கள், பொருட்கள், நபர்கள், செயல்கள், இடங்கள், உணர்வுகள் இவைகளை பொறுத்துதான், அவை பலன்களாக கருதப்படுகிறது.. உங்கள் கனவில் எலுமிச்சம் பழத்தை கண்டால் மிகவும் நல்லது.. அதிலும் தனக்கு ஒருவர் தருவதாக கண்டால் சகல பாக்கியங்களும் பெருகும் என்பார்கள்.. சிறு குழந்தைகளை கனவில் கண்டாலும், அல்லது இறந்தவர்களின் சடலத்தை கனவில் கண்டால் சுபநிகழ்ச்சிகள் நடக்கும் என்று அர்த்தமாம்.. இறந்தவருடன் பேசுவதை போல கனவு கண்டால் அதிகாரம், பதவி, லாபம் நிச்சயம் கூடி வரும்.
பதவி உயர்வு: நட்சத்திர கூட்டங்களை கனவில் கண்டால் உத்தியோகத்தில் பதவி உயர்வு விரைவில் வரும்.. வானவில்லை கனவில் கண்டால் பணம், செல்வாக்கு அதிகரிப்பதுடன், பதவி உயர்வும் வரும்..
நதி, குளம்: அதேபோல, நதி, குளம் போன்ற இடங்களில் நீந்துவதைபோல் கனவு கண்டாலோ அதுவும் மங்களகரமானதாக பார்க்கப்படுகிறது.. கனவில் மழையை பார்த்தால், பணம் மழையை போலவே கொட்டப்போகிறது என்று பொருள்.. கனவில் தாமரை பூவினை பார்த்தாலும் நல்ல அறிகுறியே.. உங்களுடைய பிரச்சனைகள் எல்லாம் விரைவில் நீங்க போகிறது என்று அர்த்தம். கோயில்கள் பற்றிய கனவுகள் வந்தால் நீங்கள் நினைத்த காரியங்கள் அத்தனையும் நிறைவேற போகிறது என்று அர்த்தமாம். குறிப்பாக, கோயில் நடை திறந்து அதில் செல்வது போல கனவு கண்டால் மிகவும் நல்லது.. நீங்கள் எடுத்து வைக்கும் அத்தனை காரியமும் ஜெயம்தான். கோயில் கருவறை: கருவறைக்கு சென்று கடவுளுக்கு மாலை அணிவிப்பது போல கனவு கண்டால் உங்களுக்கு பணவரவு வரப்போகிறது என்று அர்த்தம். கடவுளை கனவில் கண்டால், வேலை இல்லாதவர்களுக்கு வேலை கிடைக்கும், திருமணமாகாதவர்களுக்கு திருமணம் கைகூடிவரும். கோபுரத்தை கனவில் கண்டால் உங்கள் வாழ்க்கை மேலோங்கி செல்கிறது என்று அர்த்தம். கோயில் தெப்பக்குளம் கனவில் வந்தால், கடல்தாண்டி செல்லக்கூடிய வாய்ப்புகள் வரும். ஆனால், கோயிலுக்குள் போக முடியாமல் கூட்டத்தில் சிக்கியது போல கனவு வந்தாலோ அல்லது காளி தீபம் கனவில் வந்தாலோ குடும்பத்தில் பிரச்சனைகளும், சிக்கல்களும் வரப்போவதாக அர்த்தமாம். விநாயகர் சிலை: விநாயகர் சிலை கனவில் வந்தாலோ அல்லது விநாயகரை வழிபடுவது போல கனவு வந்தாலோ மிகவும் நல்லது.. மங்களகரமானதாக கருதப்படுகிறது..
விநாயகர் குதிரையில் வருவது போல் கனவு வந்தால் உங்களது ஆசைகள் நிறைவேற போகிறது, மங்கள நிகழ்வு நடக்க போகிறது என்றே அர்த்தம். ஆனால், இப்படி வரும் கனவுகளை யாரிடமும் பகிர்ந்து கொள்ளவோ கூடாது என்பார்கள்.