இன்னும் திறக்கப்படாத பெங்களூர் மாநகராட்சி வார்டு அலுவலகங்கள்

பெங்களுர், பிப். 23 – கிரேட்டர் பெங்களூர் மாநகராட்சியின் 225 வார்டுகளின் அலுவலகங்கள் மற்றும் 75 துணை பிரிவு அலுவலகங்களை திறக்குமாறு தலைமை ஆணையர் உத்தரவு பிறப்பித்து ஒன்றரை மாதங்கள் ஆகி இருப்பினும் வட்டார ஆணையர்கள் இது வரை இது குறித்து எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.. புதிதாக வார்டுகளை புனரமைத்து அறிவிக்கப்பட்டுள்ள திட்டப்பணிகள் , , வருவாய் சுகாதாரம் மற்றும் மாநகராட்சியின் மற்ற அனைத்து பகுதிகளிலும் சமமாக பணிகள் நடக்கும் வகையில் நடவடிக்கைகள் மேற்கொள்ளவேண்டும் என மாநகராட்சி தலைமை ஆணையர் துஷார் கிரிநாத் கடந்த ஜனவரி மாதம் 10 அன்று உத்தரவு பிறப்பித்திருந்தார். இந்த உத்தவை எலஹங்கா பகுதி விடுத்து மீதமுள்ள ஏழு வளையங்களின் ஆணையர்கள் இது குறித்து எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. 198 வார்டுகளை புனரமைத்து 225 வார்டுகள் அமைக்கப்பட்டு நகர அபிவிருத்தி துறை கடந்த 2023 செப்டெம்பர் மாதம் 30 அன்று உத்தரவு பிறப்பித்திருந்தது . அதன் படி ஒவ்வொரு துணை பிரிவுகள் , வார்டு அலுவலகங்களை புதிதாக திறக்க வேண்டும். இந்த புதிய அலுவலகங்களின் முகவரிகளை மற்றும் புனரமைக்கப்பட்ட வார்டுகள் குறித்த விவரங்களை பொதுமக்களுக்கு தெரிவித்து சாலைகளின் பெயர்பலகைகளில் அந்தந்த வார்டுகள் பெயர் குறிப்பிடப்பட வேண்டும் என்றும் ஆணையர் தெரிவித்திருந்தார். புதிய அலுவலகங்களுக்கு தற்போது பணியாற்றிவரும் ஊழியர்களை இடம் மாற்றி தற்காலிகமாக தங்களுக்குள் மறு மாற்றம் செய்து நியமிக்க வேண்டும். துணை பிரிவுகள் மற்றும் வார்டு அலுவலகங்களுக்கு தொடர்பான கோப்புகள் மற்றும் ஆவணங்கள் அந்தந்த அலுவலகங்களுக்கு அனுப்பி வைத்து ஆன் லைனில் பதிவிறக்கம் செய்ய உடனே நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்றும் வளைய ஆணையர்கள் , இணை ஆணையர்கள் , மற்றும் தலைமை பொறியாளர்களுக்கு ஆணையர் தெரிவித்திருந்தார் .ஆனால் இந்த நடவடிக்கைகள் இன்னும் ஏழு பிரிவுகளில் துவங்கப்படவில்லை. ராஜராஜேஸ்வரிநகர் , மேற்கு , பொம்மனஹள்ளி பிரிவுகளின் இணை ஆணையர் விரைவில் திறக்க நடவடிக்கை மேற்கொள்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தாசரஹள்ளி , மஹாதேவபுரா , மேற்கு மற்றும் தேர்க்குஇது குறித்து எந்த தகவலும் தெரிவிக்கவில்லை . 225 வார்டுகளின் துணை பிரிவு அலுவலகங்கள் மற்றும் வார்டு அலுவலகங்கள் துவங்கப்படவில்லை என்றால் மக்கள் அளிக்கும் புகார்கள் உட்பட காத்தா , சொத்து வரி உட்பட அனைத்துமே பழைய வார்டு பெயர்களிலேயே பதிவாகும் நிலை உள்ளது. காத்தா பதிவுக்கு பொதுமக்கள் சென்றால் புதியா அலுவலகங்கள் திறந்த பின்னர் வருமாறு திருப்பி அனுப்புகிறார்கள். என பலரும் தெரிவித்தனர்