இன்றும் பெட்ரோல் டீசல் விலை உயர்வு

பெங்களூரு, அக். 13- பெட்ரோல் மற்றும் டீசல் விலை இன்று ஒரே நிலையில் இருந்தாலும் மாநிலத்தின் பல மாவட்டங்களில் இவற்றின் விலை அதிகரித்துள்ளது. பெங்களுருவில் லிட்டர் பெட்ரோல் 108 .80 க்கும் டீசல் லிட்டருக்கு 98.89 க்கும் விற்பனையாகிறது.இதுவே சித்ரதுர்காவில் பெட்ரோல் 35 பைசா அதிகரித்துள்ளது. பெல்லாரியில் டீசல் லிட்டருக்கு 110.40 க்கு விலையேற்றப்பட்டு புதிய சாதனை படைத்துள்ளது. பாகல்கோட்டவில் பெட்ரோல் லிட்டருக்கு 108.71, என்றும் பெங்களூரு கிராமந்தரத்தில் 108.74க்கும் பெல்லாரியில் 110 . 10க்கும் உத்தர கன்னடாவில் 110 ரூபாய்க்கும் யாதகிரியில் 108. 89க்கும் பேரொளி விற்பனையாகிறது. அதே போல் டீசல் பாகல்கோட்டவில் 99.49க்கும் பெங்களூருவுவில் 98. 89க்கும் பெல்லாரியில் 100.76க்கும் பெங்களூரு கிராமாந்தரத்தில் 89.04க்கும் பெலகாவியில் 98.69க்கும் பீதரில் 99. 72க்கும் பிஜாபூராவில் 98.65க்கும் விற்பனையாகி வருகிறது.