இன்றும் 22 விமானங்கள் ரத்து

சென்னை:டிசம்பர். 6 – சென்னை விமான நிலையத்தில் 22 விமானங்கள் இன்று ரத்து செய்யப்பட்டுள்ளது. சென்னையில் இருந்து புறப்பட வேண்டிய 11 விமானங்களும், சென்னைக்கு வர வேண்டிய 11 விமானங்களும் ரத்து செய்யப்பட்டது. விமான பைலட்டுகள், பொறியாளர்கள் மற்றும் பயணிகள் இல்லாததால் 22 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது. மிக்ஜாம் புயலின் காரணமாக சென்னை மாநகரம் ஸ்தம்பித்துவிட்டது. சென்னையில் தொடர்ந்து கனமழை பெய்து வந்ததன் காரணமாக சாலைகளில் வெள்ள நீர் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. கடந்த இரண்டு நாட்களாக தமிழ்நாடு அரசால் பொது விடுமுறை விடப்பட்டது. இதனிடையே தொடர் கனமழை காரணமாக சென்னை விமான நிலையத்தில் உள்நாடு மற்றும் சர்வதேச விமான சேவைகள் பாதிக்கப்பட்டன.