இன்று இரவு முதல் வரும் 21 வரை பீன்யா மேம்பாலம் மூடுதல்

பெங்களூர் : ஜனவரி. 16 – நகரிலிருந்து மாநிலத்தின் பல்வேறு பகுதிகளுக்கும் தொடர்பு ஏற்படுத்திவந்த முக்கிய தேசிய நெடுஞசாலை 4ன் பீன்யாவில் உள்ள முனைவர் சிவகுமார் ஸ்வாமிஜி பெயரில் உள்ள மேம்பாலம் இன்று இரவு முதல் அடுத்த நான்கு நாட்களுக்கு வாகன போக்குவரத்திற்கு முழு தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த மேம்பாலத்தில் பயன்படுத்தப்பட்ட தரமற்ற செயல்பாடுகளால் இந்திய எடை பரிசோதனை ஆய்வகம் அறிவித்துள்ள அறிக்கையின் அடிப்படையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த வகையில் இன்று இரவு 11 மணி முதல் மேம்பாலம் மூடப்படுவதால் வாகன ஓட்டிகள் சர்விஸ் வீதி மற்றும் மாற்று வீதிகளை பயன்படுத்திக்கொள்ளுமாறு போக்குவரத்து போலீசார் தெரிவிதுள்ளனர். நெலமங்களாவிலிருந்து நகருக்கு மேம்பாலம் வாயிலாக வ4 மற்றும் ரும் வாகனங்கள் கென்னமெட்டல் விதியா வாயிலாக மேம்பாலத்தின் பக்கத்தில் உள்ள தேசிய நெடுஞசாலை 4 மற்றும் சர்விஸ் வீதி வாயிலாக எட்டாவது மைல் கல் பின்னர் தாசரஹள்ளி , ஜாலஹள்ளி க்ராஸ் ,
பீன்யா போலீஸ் நிலைய சந்திப்பு , மற்றும் ஏன் ஆர் எஸ் சமதிப்பு வாயிலாக கோருகுண்டேபாளையவை சென்றடையலாம். சி எம் டி ஐ சந்திப்பிலிருந்து நெலமங்களா மார்கமாக மேம்பாலத்தில் செல்லும் வாகனங்கள் பார்லே ஜி நிறுவனத்தை அடைய மாற்று வழிகளை பயன் படுத்திக்கொள்ளவேண்டும் என போக்குவரத்து போலீசார் தெரிவித்துள்ளனர்.