இன்று மாலையுடன்2000 ரூபாய் நோட்டு கதை முடிந்தது

பெங்களூரு, அக். 7: ரூ.2000 மதிப்புள்ள‌ நோட்டுகள் இன்றுடன் காலாவதியாகிறது. யாரேனும் அந்த ரூபாய் நோட்டுகளை வைத்திருந்தால், வங்கிக்கு சென்று மாற்றிக் கொள்ளுங்கள்.
ரூ.2000 நோட்டுகளை ஏழை நடுத்தர மக்கள் குறிப்பாக கிராமப்புற மக்கள் இன்னும் பாதுகாப்பாக வைத்துள்ளனர். அப்படிப்பட்டவர்கள் இன்று தவறாமல் வங்கிகளுக்குச் சென்று மாற்றிக் கொள்ளுங்கள். அல்லது வங்கிக் கணக்கில் டெபாசிட் செய்யுங்கள். ரூ.2000 ரூபாய் நோட்டுகளை மாற்றவோ அல்லது வங்கிகளில் டெபாசிட் செய்யவோ இன்றுதான் கடைசி நாளாகும். இன்று மாற்றவில்லை என்றால் அதன் மதிப்பு இன்று மாலைக்கு பிறகு காலாவதியாகிவிடும்.
ரூ.2000 மதிப்புள்ள ரூபாய் நோட்டுகள் 2016ல் அறிமுகம் செய்யப்பட்டது. 2018ல் 2000 ரூபாய் அச்சடிப்பது நிறுத்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து படிப்படியாக ரூ.2000 மதிப்புள்ள ரூபாய் நோட்டுகள் புழக்கத்திலிருந்து நிறுத்தப்பட்டது. அதனை பயன்படுத்த இன்றுதான் கடைசி நாளாகும்.
ரூ. 2000 நோட்டுகளை கறுப்புப் பணமாகப் பயன்படுத்துவது அதிகரித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. சுமார் 60-65% நோட்டுகள் பயன்பாட்டில் இல்லாமல் பதுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. எனவே புதிய ரூபாய் நோட்டை கொண்டு வர 2000 ரூபாய் நோட்டை திரும்பப் பெறுவதாக‌ ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.
கள்ளப்பணத்தை நல்லப்பணமாக மாற்ற இந்தக் கொள்கைக்கான மாற்றத்தை ரிசர்வ் வங்கி கொண்டு வந்துள்ளது என்பதை பொருளாதார நிபுணர்கள் ஒப்புக்கொள்கிறார்கள். ரிசர்வ் வங்கி 3 லட்சத்து 55 ஆயிரம் கோடி மதிப்புள்ள 2000 ரூபாய் நோட்டுகளை சந்தையில் விட்ட நிலையில், இதுவரை 3 லட்சத்து 43 ஆயிரம் கோடி ரூபாய் மட்டுமே வங்கிகளுக்கு திரும்பி வந்துள்ளன‌.12,000 கோடி மதிப்பிலான 2000 மதிப்புள்ள ரூபாய் நோட்டுகள் திரும்ப வரவில்லை என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. ஏழை நடுத்தர மக்கள் குறிப்பாக கிராமப்புற மக்கள் இன்னும் 2000 மதிப்புள்ள நோட்டுகளை பாதுகாப்பாக வைத்திருந்தால், அவ‌ர்கள் இன்று தவறாமல் வங்கிகளுக்குச் சென்று அதனை மாற்றிக் கொள்ள வேண்டும்.