இன்று முதல் 3 புதிய மெட்ரோ இணைப்பு சேவை பேருந்துகள் அறிமுகம்

பெங்களூரு, மார்ச் 4: பிஎம்டிசி 3 வழித்தடங்களில் புதிய‌ மெட்ரோ இணைப்பு பேருந்து சேவைகளை திங்கள்கிழமை அறிமுகம் செய்துள்ளது.
அதன்படி, எம்எப் 15ஏ எண் கொண்ட பேருந்து. ஆர்வி பல் மருத்துவக் கல்லூரி, புட்டேன‌ஹள்ளி கிராஸ், பிரிகேட் மில்லேனியம் மற்றும் கொத்தனூர் தின்னே வழியாக ஜம்பு சவாரி திண்ணைக்கு ஜேபி நகர் மெட்ரோ நிலையம். இரண்டு பேருந்துகள் ஒரு நாளைக்கு இரு வழிகளிலும் 40 பயணங்களை மேற்கொள்ளும்.
எம்எப் 16 எண் கொண்ட பேருந்து, சாந்திநகர் பேருந்து நிலையம் முதல் கார்ப்பரேஷன் வட்டம்,
கே.ஆர்.மார்க்கெட், மைசூரு சாலை மெட்ரோ நிலையம், ஹொசகெரேஹள்ளி கிராஸ், ஸ்ரீனிவாசா நகர், வடக்கு சாலை, லால்பாக் மேற்கு கேட் மற்றும் லால்பாக் மெயின் கேட் வழியாக 4 பேருந்துகள் ஒரு நாளைக்கு இரு வழிகளிலும் 39 பயணங்களை மேற்கொள்ளும்.எம்எப் 16ஏ எண் கொண்ட பேருந்து, சாந்திநகர் பேருந்து நிலையம், லால்பாக் மெயின் கேட், லால்பாக் மேற்கு கேட், வடக்கு சாலை, சீனிவாசநகர், ஹோசகெரேஹள்ளி கிராஸ், மைசூரு சாலை மெட்ரோ நிலையம்,கே.ஆர்.மார்க்கெட் மற்றும் கார்ப்பரேஷன் வட்டம் வழியாக 4 பேருந்துகள் நாள் ஒன்றுக்கு இரு வழிகளிலும் 40 பயணங்களைச் மேற்கொள்ள உள்ளன‌.