இன்று 6570 பேர் பாதிப்பு 36 பேர் சாவு


பெங்களூர் ஏப். 8-
கர்நாடக மாநிலத்தில்
கொரோனா வைரஸ் தொற்று அதிகரிப்பு தொடர்கிறது. இன்றும், தினசரி பாதிப்பு ஏழாயிரத்தை நெருங்கியது.
பெங்களூரு நகரில் இன்று ஒரே நாளில் நான்காயிரத்திற்கும் அதிகமான பேர் பாதிக்கப்பட்டனர்.
கடந்த 24 மணி நேரத்தில், 36 பேர் இறந்துள்ளனர்.
பெங்களூரு நகரில் 22, பேர் கலபுர்கியில் 3 பேர், பெங்களூர் கிராமப்புரம் மாண்டியா மாவட்டங்களில் தலா 2 பேர் பெல்காம், பிதர், தார்வாட், கோலார், தும்கூர், விஜயாப்பூர் மற்றும் மைசூர் ஆகிய இடங்களில் தலா ஒருவர் இறந்துள்ளனர்.
மீதமுள்ள மாவட்டங்களில் கொரோனாவிலிருந்து எந்த மரணமும் ஏற்படவில்லை. இன்று, மாநிலத்தில் 6570 பேர் பாதிக்கப்பட்டது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இன்று ப 2393 பேர் குணம் அடைந்து உள்ளனர்.
பெங்களூரில், கடந்த 24 மணி நேரத்தில் 4422 பேருக்கு கொரோனா வைரஸ் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது, 1243 பேர் குணம் அடைந்து வீடு திரும்பியுள்ளனர்