இமயமலை யாத்திரைக்கு ஒரு மாதத்தில் 18 லட்சம் யாத்ரீகர்கள்

ங்கோத்ரிக்கு 3,33,9090 யாத்ரீகர்களும், யமுனோத்ரிக்கு 2,50,398 யாத்ரீகர்களும் வந்துள்ளனர். இமயமலைக் கோயில்களுக்கு இதுவரை சென்ற மொத்த யாத்ரீகர்களின் எண்ணிக்கை 18,01,209-ஆக உள்ளது. இமயமலையில் உள்ள சார் தாம் யாத்திரை தொடங்கிய ஒரு மாதத்திற்குள் 18 லட்சத்துக்கும் அதிகமான யாத்ரீகர்கள் வந்துள்ளதனர். இதுகுறித்து பத்ரிநாத்- கேதார்நாத் கோயில் கமிட்டியின் ஊடகப் பொறுப்பாளர் ஹரிஷ் கவுட் கூறியதாவது:- ஒரு மாதத்தில் 18 லட்சத்துக்கும் அதிகமான யாத்ரீகர்கள் சார்தாம் ஆலயங்களுக்கு வருகை தந்துள்ளனர். இதில், பத்ரிநாத்துக்கு 6,18,312 யாத்ரீகர்களும், கேதார்நாத்துக்கு 5,98,590 யாத்ரீகர்களும் வந்துள்ளனர். இதேபோல், கங்கோத்ரிக்கு 3,33,9090 யாத்ரீகர்களும், யமுனோத்ரிக்கு 2,50,398 யாத்ரீகர்களும் வந்துள்ளனர். மேலும், இமயமலைக் கோயில்களுக்கு இதுவரை சென்ற மொத்த யாத்ரீகர்களின் எண்ணிக்கை 18,01,209-ஆக உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.