இம்ரான்கான் மீது துப்பாக்கிச்சூடு ஆதரவாளர்கள்ஆர்ப்பாட்டம்

இஸ்லாமாபாத், நவ. 5 – பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் மீது துப்பாக்கி சூடு நடத்தப்பட்டதை கண்டித்து அவரது ஆதரவாளர்கள் போராட்டத்தில் குதித்துள்ளனர். நாடு முழுவதும் நடந்து வரும் போராட்டங்களால் பாகிஸ்தானில் பதற்றம் நிலவுகிறது. பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் நாட்டில் முன்கூட்டியே பொதுத் தேர்தலை நடத்த வலியுறுத்தி தன்னுடைய பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாப் கட்சியின் சார்பில் லாகூரில் இருந்து தலைநகர் இஸ்லாமாபாத் நோக்கி பிரமாண்ட பேரணியை கடந்த வாரம் தொடங்கினார். இந்தப் பேரணி நேற்று முன்தினம் பஞ்சாப் மாகாணம் வாஜிராபத் நகருக்குச் சென்றது. இம்ரான்கான் கன்டெய்னர் லாரியில் பேரணியாகச் சென்று கொண்டிருந்தபோது, அடையாளம் தெரியாத நபர் ஒருவர் இம்ரான்கானை துப்பாக்கியால் சரமாரியாக சுட்டார். இதில் அவரது வலது காலில் துப்பாக்கி குண்டு பாய்ந்தது. அதோடு அவருடன் நின்றிருந்த கட்சியின் மூத்த தலைவர்கள் சிலரும் காயமடைந்தனர்.