இம்ரான் கானை கொல்லவே சுட்டேன் கைதான நபர் வாக்குமூலம்

இஸ்லாமாபாத், நவ.4-
பாகிஸ்தானின் முன்னாள் பிரதமரான இம்ரான் கான், அந்நாட்டு அரசுக்கு எதிராக போராட்டம் நடத்தி வருகிறார். அந்த வகையில் வஜிராபாத் நகரில் இம்ரான் கான் தலைமையில் இன்று பிரமாண்ட பேரணி நடைபெற்றது. இந்த பேரணியில் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது. இதில் இம்ரான் கானின் வலது காலில் குண்டு பாய்ந்து காயம் ஏற்பட்டது. உடனடியாக அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். இம்ரான் அடுத்த 3 வாரங்களுக்கு நடக்க முடியாது என்று மருத்துவமனை வட்டாரங்கள் கூறுகின்றன. இந்த சம்பவத்திற்கு பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்த சம்பவத்தில் ஒருவர் கைது செய்யப்பட்டு உள்ளார். தாக்குதல் நடத்தியவர்களில் ஒருவரை கூட்டம் மற்றும் கானின் பாதுகாவலர்களால் அடித்துக் கொல்லப்பட்டதாகவும், ஒருவர் காவலில் வைக்கப்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. துப்பாக்கிச் சூடு நடத்தியதில் இம்ரான் கான் கட்சி ஆதரவாளர் கொல்லப்பட்டார், சட்டமன்ற உறுப்பினர்கள் உட்பட 14 பேர் காயமடைந்தனர். மக்களை தவறாக திசைதிருப்பி வழி நடத்திச் செல்வதால் ஆத்திரமடைந்து சுட்டதாகவும் அவர் தெரிவித்தார். தமது பின்னணியில் யாரும் இல்லை என்றும் அவர் கூறியுள்ளார். முன்னதாக துப்பாக்கியால் சுட்ட நபரை மடக்கிப் பிடித்த ஒருவரை இம்ரான் கானின் ஆதரவாளர்கள் தோளில் ஏற்றி கொண்டாடினர். இதனிடையே சில ஆதரவாளர்கள் ஆத்திரம் அடைந்து ராணுவ பீரங்கிகளை அடித்து நொறுக்கினர். தொடர்ந்து நாட்டுமுழுவதும் போராட்டம் வெடித்து உள்ளது.