இரட்டை இலையில்தான் போட்டி’ – ஓபிஎஸ்

சென்னை மார்ச் 14: பாஜகவுடன் ஓபிஎஸ் அணி கூட்டணி உறுதியான நிலையில், 2-ம் கட்ட பேச்சுவார்த்தை நேற்று முன் தினம் இரவு நடந்தது. அப்போது, மத்திய அமைச்சர்கள், அண்ணாமலை உள்ளிட்டோருடன் பேசிய பிறகு செய்தியாளர்களிடம் ஓபிஎஸ் கூறியதாவது: எங்களுக்கு உறுதியாக இரட்டை இலை சின்னம் கிடைக்கும். அந்த சின்னத்தில் தான் நாங்கள் தேர்தலில் போட்டியிடுவோம். இரட்டை இலை பிரச்சினைக்கான முடிவு இந்திய தேர்தல் ஆணையத்திடம் இருக்கிறது.
இரட்டை இலை சின்னத்துக்கான தீர்ப்புகள் அனைத்தும் தற்காலிகமானவைதான். கடந்த காலங்களில் யார் யார் எப்படி செயல்பட்டார்கள் என்பதை ஆராய்ந்து, சாதக பாதகத்தை பார்த்து சின்னம் குறித்து தேர்தல் ஆணையம் முடிவு செய்யும். இவ்வாறு அவர் கூறினார்.