இரட்டை எஞ்சின் அரசால் கர்நாடக தேவைகள் பூர்த்தி:மோடி

மங்களூர் : செப்டம்பர். 2 – மத்திய மற்றும் மாநிலத்தில் உள்ள இரட்டை என்ஜின் அரசுகள் வாயிலாக மாநில மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்ற சாத்தியமாகிறது என பிரதமர் நரேந்திர மோதி தெரிவித்துள்ளார். கடந்த எட்டு ஆண்டுகளில் அடிப்படை வசதிகள் துறையில் நடந்துள்ள வளர்ச்சிகளில் பெருமளவிற்கு கர்நாடகாவிற்கு கிடைத்துள்ளது. சாகரா மாலா திட்டம் ,, தேசிய நெடுஞசாலைகள் அபிவிருத்தி , ரயில் தடயங்கள் மின்மயமாக்குதல் உட்பட பல பிரிவுகளில் நான்கு மடங்கு அதிகமாக சாதனை புரிய முடிந்தது. 3,800 கோடி ரூபாய்கள் மதிப்பிலான 8 திட்டங்களை நாட்டுக்கு அர்ப்பணித்த பின்னர் பேசிய பிரதமர் மோதி ஜலஜீவன் மிஷன் திட்டத்தின் கீழ் மாநிலத்தில் 30 லட்ச வீடுகளுக்கு நேரடியாக குடிநீர் வழங்கும் திட்டம் நிறைவு பெற்றுள்ளது. பிரதமர் ஆயுஷ்மான் திட்டத்தின் கீழ் 30 லட்ச பயனாளிகளுக்கு 4 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான மருத்துவ சேவைகள் இலவசமாக அளிக்க சாத்தியமாயிற்று . நாட்டின் முதன் முதலான உள்நாட்டு தயாரிப்போர் விமானங்களை ஏற்றி செல்லும் கப்பல் பணி கொச்சியில் நாட்டுக்கு அர்பணிக்கப்பட்டது. மத்திய அரசு நாட்டின் ராணுவ பாதுகாப்பிற்கு மற்றும் பொருளாதார தேவைகளுக்கு அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறது. நவ மங்களூர் பகுதியில் அடிப்படை வசதிகளை மேம்படுத்தும் நோக்கில் 3800 கோடி மதிப்பிலான திட்டங்கள் துவக்கிவைக்கப்பட்டுள்ளன. இதனால் நாட்டின் பொருளாதாரம் மட்டுமின்றி உள்ளூர் வாசிகளுக்கு அதிகளவில் வேலை வாய்ப்பு உருவாகும் வாய்ப்புகள் உள்ளன. ஒரு மாவட்டம் ஒரு தொழிற்சாலை என்ற திட்டத்தின் கீழ் உள்ளூர் விவசாயிகள் மற்றும் மீன் தொழிலாளர்களுக்கு தங்கள் உற்பத்திகளை ஏற்றுமதி செய்ய இந்த திட்டம் எளிதாக்கும் . குறைந்த செலவில் பொருள்களை ஏற்றுமதி செய்ய இது உதவும். இந்த வகையில் நவ மங்களூர் சந்தையின் திறமை மூன்று மடங்கிர்க்கு உயரவுள்ளது. நாட்டின் சுதந்திரத்துக்காக பாடுபட்ட வீர ராணி அப்பக்கா , மற்றும் ராணி சென்னபைராதேவி ஆகியோர் எனக்கு வழிகாட்டிகளாக உள்ளனர். இவ்வாறு பிரதமர் மோதி தன் உரையில் தெரிவித்தார்.