இரண்டரை கோடி ரூபாய் பணத்தில் அலங்காரம்

பெங்களூர் செப். 19: பெங்களூர் ஜே.பி. நகரில் உள்ள சத்யா கணபதி கோவிலில் விநாயகர் சதுர்த்தி முன்னிட்டு இரண்டரை கோடி ரூபாய் நோட்டுக்களால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. 5 ரூபாய் 10 ரூபாய் 20 ரூபாய் 50 ரூபாய் 100 ரூபாய் 200 ரூபாய் 500 ரூபாய் நோட்டுக்களால் மூலவர் உட்பட கோவில் முழுவதும் கண்களை கவரும் வகையில் அலங்காரம் செய்யப்பட்டிருந்தது
இதேபோல் பெங்களூரில் உள்ள மற்ற கோவில்களில் விநாயகர் சதுர்த்தி முன்னிட்டு சிறப்பு அலங்காரங்கள் செய்யப்பட்டு இருந்தன.கோவில்களில் நடந்த விசேஷ பூஜைகளில் பக்தர்கள் திரளாக பங்கேற்றனர்.