இரண்டு பேரை கடத்தி 11 லட்சம் வழிப்பறி செய்த 5 பேர் கும்பல் கைது

பெங்களூர்: செப்டம்பர். 19 – நில விவகாரம் தொடர்பாக பேசுவதாக நடித்து அழைத்து பெண் உட்பட இரண்டு பேரை கடத்தி 11 லட்ச ரூபாய்களை அபகரித்துள்ள ஐந்து குற்றவாளிகளை பைட்டராயணபுரா போலீசார் கைது செய்வதில் வெற்றியடைந்துள்ளனர். ஹைதராபாத்தை சேர்ந்த பிரசாத் , சத்யநாராயணா , மஹாராஷ்டிராவை சேர்ந்த ஸ்ரீதர் , கிரண் மோரே , மற்றும் நாகோராவ் ஆகியோர் கைது செய்யப்பட்ட குற்றவாளிகள். இதில் முதல் குற்றவாளி ஹரிஷ் மற்றும் வர்மா ஆகியோர் தலைமறைவாயிருப்பதுடன் அவர்களை போலீசார் தேடி வருகின்றனர். கடந்த ஆகஸ்ட் மாதம் 16 அன்று மைசூர் வீதியின் சாட்டிலைட் பஸ் நிலையத்தின் அருகில் உள்ள ஓட்டல் அருகிலிருந்து கே ஆர் புரத்தின் விநாயகா லே அவுட்டின் வசந்தா மற்றும் அவருடைய சகோதரன் சிவா ரெட்டி ஆகியோரை குற்றவாளிகள் கடத்தினர். பின்னர் அவர்களை மிரட்டி 11 லட்ச ரூபாய்களை அபகரித்து வெளியே சொன்னால் கொலை செய்வதாக மிரட்டி அனுப்பிவைத்துள்ளனர். சமூக சேவகியான வசந்தா மற்றும் அவளுடைய சகோதரன் சிவா ரெட்டி நிலங்கள் மற்றும் வீடுகள் விற்கும் ரியல் எஸ்டேட் தரகர் பணி செய்து வந்தனர். ஆகஸ்ட் 16 அன்று மாலை 6 மணியளவில் வசந்தாவின் மொபைல் எண்ணுக்கு அழைத்துள்ள குற்றவாளி ஹரீஷ் பெங்களூருக்கு வருவதாக தெரிவித்துள்ளான். நிலம் விஷயமாக பேச வேண்டும் என கூறி இருவரையும் சாட்டிலைட் பஸ் நிலையம் அருகில் உள்ள அடையார் ஆனந்த பவன் ஓட்டல் அருகில் வரவழைத்துள்ளான். அதே போல் வசந்தாவும் சிவா ரெட்டியும் ஓட்டல் அருகில் வந்துள்ளனர். சிறிது நேரம் சென்றதும் குற்றவாளி ஹரீஷ் , சத்யநாராயணா , பிரசாத் மற்றும் மேலும் மூன்று பேர் ஓட்டலில் பேசுவது வேண்டாம் , வேறு எங்காவது செல்வோம் என வசந்தா மற்றும் சிவா ரெட்டியை காரில் அமர்த்திக்கொண்டு தேவனஹள்ளி மார்கமாக சென்றுள்ளனர். அப்போது சந்தேகம் அடைந்த வசந்தா எங்கு அழைத்து செல்கிறீர்கள் என கேட்டுள்ளார் . அப்போது குற்றவாளிகள் வசந்தா மற்றும் சிவா ரெட்டியின் போனை பிடுங்கிக்கொண்டு சும்மா வருமாறு மிரட்டியுள்ளனர். பின்னர் இவர்களிடமிருந்து 11 லட்ச ரூபாயை மிரட்டி அபகரித்துக்கொண்டு இது குறித்து வெளியில் சொன்னால் இரண்டு போரையும் கொலை செய்து விடுவதாக மிரட்டி பின்னர் அனுப்பிவைத்துள்ளனர். இது குறித்து வழக்கு பதிவு செய்து கொண்ட போலீசார் நடவடிக்கையில் இறந்துகி குற்றவாளிகளை கைது செய்துள்ளனர்.