இரண்டு வார ஆட்டுக்குட்டிக்கு 50 செ.மீ. நீள காது

லாகூர் : ஜூன்,20
பாகிஸ்தான் நாட்டின் கராட்சி மாகாணத்தை சேர்ந்தவர் முகமது ஹசன் நரிஜோ. இவர் தனது வீட்டில் ஆடுகளை வளர்த்து வருகிறார். இந்நிலையில், அவரது ஆட்டுப்பண்ணையில் கடந்த 2 வாரங்களுக்கு முன் ஆடு ஒன்று குட்டியை ஈன்றது. அந்த ஆட்டுக்குட்டியின் காது மற்ற ஆட்டுக்குட்டிகளின் காதை விட மிகவும் நீளமாக இருந்ததை கண்டு உரிமையாளர் மிகவும் ஆச்சரியமடைந்தார். அந்த ஆட்டுக்குட்டிக்கு சம்பா என பெயரிட்ட முகமது ஆட்டுக்குட்டியின் காது எவ்வளவு நீளமாக உள்ளது என அளவெடுத்துள்ளார். அதில் ஒவ்வொரு காதும் 19 இன்ச் நீளமாக அதாவது சுமார் 50 சென்டிமீட்டர் நீளமாகும். பிறந்து 2 வாரங்களே ஆன ஆட்டுக்குட்டிக்கு 50 சென்டிமீட்டர் நீளமான காது இருப்பது அப்பகுதி மக்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. இதையடுத்து, அந்த ஆட்டுக்குட்டியை அக்கம்பக்கத்தினர் வந்து ஆர்வமாக கண்டு சென்றனர்.