இருசக்கரத்தில் வீலிங்கில் ஈடுபட்டவர்களின் வாகனங்கள் பறிமுதல்

பெங்களூரு, மார்ச் 25:
இரு சக்கர வாகனத்தில் வீலிங்கில் ஈடுபட்ட ஒருவர் மீது ஒயிட்ஃபீல்ட் போக்குவரத்து போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
பெங்களூரில் இருசக்கர வாகனங்களைச் சோதனையிடுவதை போக்குவரத்து போலீசார் தொடர்ந்து நடத்தி வருகின்றனர். சனிக்கிழமை போலீஸார் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தபோது, ​​வர்த்தூர் முக்கியச் சாலையில் ஹோண்டா டியோ ஸ்கூட்டரில் ஒருவர் வீலிங்கில் ஈடுபட்டதைக் கண்டனர்.சந்தேக நபரையும், வாகனத்தையும் போலீசார் அடையாளம் கண்டுள்ளனர். விசாரணையில்,
சந்தேக நபர் 18 வயதிற்கும் மேற்பட்டவர் என்பதனை போலீசார் கண்டுபிடித்தனர். எனவே, அவர் மீது முதல் தகவல் அறிக்கை (எஃப்ஐஆர்) பதிவு செய்யப்பட்டது.
சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்பட்டு, வாகனம் பறிமுதல் செய்யப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர். இது தொடர்பாக விசாரணை நடைபெற உள்ளது.முன்னதாக டி.சி.பாள்யா சந்திப்பு அருகே நபர் ஒருவர் இருசக்கர
வாகனத்தில் வீலிங்கில் ஈடுபட்ட‌தைக் கண்டுபிடித்த போலீசார் வெள்ளிக்கிழமை வழக்கு பதிவு செய்தனர். கே.ஆர்.புரம் போக்குவரத்து போலீசார் அந்த வாகனத்தை அடையாளம் கண்டு, பறிமுதல் செய்து, எப்ஐஆர் பதிவு செய்தனர்.