இருவரை கொன்ற யானை சாவு

மடிகேரி : ஆகஸ்ட். 14 – திதிமதி அருகில் உள்ள மத்திகோடு யானைகள் சரணாலயத்தில் புனர் வசதிக்கு உட்படுத்தப்பட்ட யானை உடல் உறுப்புக்கோளாறுகால் இறந்துள்ளது. ஹுணசூரு பகுதி மற்றும் திதிமதி பகுதி வனத்துறை அதிகாரிகள் யானையின் உடல் கூறு பரிசோதனை நடத்தி வன பகுதியில் யானை உடலடக்கம் செய்யப்பட்டுள்ளது. இந்தாண்டின் பிப்ரவரி மாதத்தில் கபடக்கா தாலூகாவின் சுப்ரமண்யா வனப்பகுதியில் இருவரை தாக்கி உயிரிழக்க செய்துள்ள இந்த யானையை அதே மாதம் மத்திகொடு யானை பராமரிப்பு கூடாரத்தின் தசரா யானை அபிமன்யு உதவியால் சிறைபிடிக்கப்பட்டு மத்திகோடு சரணாலயத்தில் விடப்பட்டது. முழுதுமாக பழக்கப்பட்ட யானையை ஜூலை 20 அன்று முகாமிலிருந்து வெளியே விடுக்கப்பட்டிருந்தது. வயிறு முழுக்க உணவருந்தி வேறு யானைகளுடன் நல்ல வகையில் பழகி வந்த யானை திடீரென ஆகஸ்ட் 11 அன்று சுருண்டு விழுந்துள்ளது. கீழே விழுந்த யானையை வனத்துறை அதிகாரிகள் கிரேன் வாயிலாக எழுப்பி நிற்க வைக்க முயற்சித்துள்ளனர். ஆனால் யானையால் எழுந்து நிற்கவும் முடியாமல் நேற்று மதியம் உயிரிழந்துள்ளது. பின்னர் சோதனை நடத்தியதில் யானை பல்வேறு உடல் பாகங்கள் பாதிப்பால் இறந்துள்ளதாக தெரியவந்திருப்பதுடன் பின்னர் அதே வனப்பகுதியில் யானை உடல் அடக்கம் செய்யப்பட்டுளளது