இறுதிப்போட்டியில் இந்தியா – ஆஸ்திரேலியா

கொல்கத்தா,நவ.15-
உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் 2வது அரையிறுதி ஆட்டத்தில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக ஆஸ்திரேலியா அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று இறுதி போட்டிக்கு தகுதி பெற்றது. இதன் மூலம்
ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் இறுதிப் போட்டியில் இந்தியா, ஆஸ்திரேலியா அணிகள் உலகக்கோப்பை சாம்பியன் பட்டத்திற்காக மோதுகின்றன.
இன்று நடந்த தென் ஆப்பிரிக்கா உடனான அரை இறுதி ஆட்டத்தில் ஆஸ்திரேலியா மூன்று விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
டிராவிஸ் ஹெட் 48 பந்துகளில் 62 ரன்கள் எடுத்து அவுட் ஆனார்.வார்னர் 29 ரன்களும், ஸ்டீவ் ஸ்மித் 30 ரன்களும் எடுத்தனர். ஒரு கட்டத்தில் ஆறு விக்கெட்டுகளை இழந்து தோல்வியின் விளிம்பில் இருந்தது. இந்த நேரத்தில், ஜோஷ் லிங்லிஸ் மற்றும் ஸ்டார்க் பொறுமையான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். ஆனால் 28 ரன்களில் லிங்லிஸ் அவுட் ஆனபோது, ​​ஆஸ்திரேலியா மீண்டும் சிக்கலில் சிக்கியது.
இறுதியாக கேப்டன் கம்மின்ஸ் 14 ரன்களும், மிட்செல் ஸ்டார்க் ஆட்டமிழக்காமல் 16 ரன்களும் எடுத்து அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றனர்.
இறுதியில் ஆஸ்திரேலியா 47.2 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 215 ரன்கள் எடுத்து இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது.
முக்கியமான ஆட்டங்களில் தென்னாப்பிரிக்கா மோசமான ஆட்டத்தை தொடர்கிறது. இன்றைய போட்டியில் கேட்சுகள் கைவிடப்பட்டன. இருப்பினும் ஆஸ்திரேலியா கடுமையாக போராடி வெற்றி பெற்றது.
இதற்கு முன், முதலில் பேட் செய்த தென்னாப்பிரிக்க அணி ஆஸ்திரேலியாவின் பந்துவீச்சில் தடுமாறியது. 49.4 ஓவரில் 212 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.
24 ரன்களுக்குள் முக்கியமான நான்கு விக்கெட்டுகளை இழந்தது. டேவிட் மில்லரின் தனித்து போராடியதால் அந்த அணி சுமாரான ஸ்கோரை பதிவு செய்ய முடிந்தது. மில்லர் 116 பந்துகளில் 8 பவுண்டரிகள் மற்றும் 5 சிக்ஸர்களுடன் 101 ரன்கள் எடுத்தார். கிளாசன் 47 ரன்கள் எடுத்தார். கேப்டன் பவுமா உள்ளிட்ட மற்ற வீரர்கள் சிறப்பான பேட்டிங் செய்யத் தவறி விக்கெட்டை சரணடைந்து பெவிலியன் திரும்பினர்.
ஆஸ்திரேலியா சார்பில் ஸ்டார்க் மாத்ரு கம்மின்ஸ் தலா 3 விக்கெட்டுகளையும், ஹேசல் வுட் மற்றும் ஹெட் முறையே 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். இந்த நிலையில் இந்தியா ஆஸ்திரேலியா மோதும் இறுதிப் போட்டிக்கு பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது