இறுதி ஊர்வலத்தின் போது பதட்டம் , தடியடி

மங்களூர்: ஜூலை 27 – குற்றவாளிகளால் மிக கொடூரமாக தாக்கி கொலை செய்யப்பட்ட பி ஜே பி இளைஞர் பிரிவு உறுப்பினர் பிரவீன் நெட்டாரு குடும்பத்தாரின் சோகத்துக்கிடையே அவரின் இறுதிச்சடங்குகள் இன்று நடைபெற்றது. பிரவீனின் உடலை புத்தூரிலிருந்து ஊர்வலமாக அவருடைய வீட்டிற்கு கொண்டு வரப்பட்டது. பொது மக்களின் தரிசனத்திற்கு பின்னர் பில்லவா மத சடங்குகளின்படி இறுதி சடங்குகள் நடந்தது. மந்திர கோஷங்களுக்கு பின்னர் மூன்று மாமாக்களான ஷீணப்பா பூஜாரி , லிங்கப்பா பூஜாரி , மற்றும் லோகேஷ் பூஜாரி பிரவீனின் சிதைக்கு தீ வைத்தனர். இதன் வாயிலாக பிரவீன் பஞ்ச பூதங்களுடன் ஐக்கியமானார். இதே வேளையில் சங்க் பரிவார் தொண்டர்கள் இந்த நிகழ்வில் பங்கு கொண்டு உணர்வுபூர்வமான இரங்கல்களை தெரிவித்தனர்.