
பெங்களூர் : ஆகஸ்ட். 24 – நகரில் பல வெளிநாட்டு குற்றவாளிகளின் வருகை தந்து அங்கு பல குற்ற நடவடிக்கைகளில் ஈடுபடும் புகார்கள் அதிகரித்துள்ள நிலையில் இது விஷயமாக நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ள சி சி பி போலிஸாருக்கு நகரில் தஞ்சம் அடைந்திருந்த மூன்று சர்வதேச அளவிலான குற்றவாளிகள் சிக்கியுள்ளனர்.இலங்கையில் மிக தீவிரமாக தேடப்பட்டுவரும் மூன்று குற்றவாளிகள் மற்றும் இவர்களுக்கு தஞ்சம் அளித்த ஒருவரை சி சி பி (மத்திய குற்றவியல் பிரிவு ) போலீசார் கைது செய்து இவர்களிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இலங்கையை சேர்ந்த காசின் குமார் அமிலா நுவான் , மற்றும் ரங்கபிரசாத் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ள குற்றவாளிகள் என்பதுடன் இவர்களுக்கு நகரில் தஞ்சம் அளித்த ஜே பரமேஷ் என்ற ஜாக் என்பவரும் கைது செய்யப்பட்டுள்ளார். என இணை போலீஸ் ஆணையர் முனைவர் yes டி ஷரணப்பா தெரிவித்துள்ளார். கொலை குற்றவாளியும் ஆகியுள்ள ஜெய் பரமேஷ் எலஹங்காவின் விஷ்வ் ப்ரக்ருதி அபார்ட்மெண்டில் மூன்று இலங்கை பாதகர்களுக்கு தஞ்சம் அளித்துள்ளார். காசின் குமார் என்பவனுக்கு எதிராக இலங்கையில் நான்கு கொலை வழக்குகள் உள்ளன. மற்றொரு குற்றவாளி அமிலா நுவானுக்கு எதிராக ஐந்து கொலை வழக்குகளும் ரங்கபிரசாத் என்பவனுக்கு எதிராக கலவரம் தாக்குதல் மற்றும் கொலை புகார்கள் பதிவாகியுள்ள தகவல்கள் தெரிய வந்துள்ளது. கைது செய்யப்பட்ட இவர்களிடமிருந்து 13 மொபைல் போன்கள் , இலங்கையின் பலரின் விசிட்டிங் கார்டுகள் , பஸ் டிக்கெட்டுகள் , பத்திரிகை பிரசுர துண்டுகள் , வாடகைக்கு இருந்த வீட்டின் ஒப்பந்த பத்திரம், ஆதார் அட்டைகள் , வாக்காளர் அடையாள அட்டை ஆகியவை கைப்பற்றப்பட்டுள்ளன. ஜலான் என்பவனின் உத்தரவுப்படி இந்த அபார்ட்மெண்டில் குற்றவாளிகள் தங்கி வந்திருப்பதுடன் ஜலான் ஓமன் நாட்டில் கைது செய்யப்பட்டுள்ளன. குற்றவாளி ஜலான் இலங்கை , இந்தியா மற்றும் பாகிஸ்தானுடன் தொடர்பு கொண்டிருப்பதுடன் போதை பொருள் கடத்தல் செய்துவந்ததுடன் இவனுக்கு இலங்கையின் விடுதலை புலிகளுடன் தொடர்புகள் இருப்பது தெரிய வந்திருப்பதுடன் இதை கவனிக்கும்பபோது தற்போது நகரில் கைது செய்யப்பட்டுள்ள குற்றவாளிகள் விடுதலை புலிகள் இயக்கத்தை சேர்ந்தவர்களோ என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இது குறித்து விரிவான விசாரணை நடந்து வருகிறது. எனவும் ஷரணப்பா தெரிவித்தார். இலங்கை கொடூர குற்றவாளிகள் இந்தியாவில் நுழைந்த சம்பவம் சுவாரஸ்யமாக உள்ளது. இலங்கையிலிருந்து இந்தியாவிற்கு கடல் மார்கமாக படகில் வந்து கரையில் கரை பாதுகாவலர்கள் மற்றும் பாதுகாப்பு படையினரின் கண்ணில் மண்ணை தூவி இந்தியாவிற்குள் நுழைந்துள்ளனர் . சென்னை அருகில் கடற்கரைக்கு வந்ததுடன் பின்னர் அங்கிருந்து சாலை மார்கமாக பெங்களூருக்கு வந்துள்ளனர். தற்போதைய தகவல்களின் படி கடந்த இருபது நாட்களுக்கு முன்னர் இலங்கையிலிருந்து இவர்கள் இந்தியாவிற்கு வந்திருப்பதாக தெரிகிறது. இவர்களுக்கு எதிராக தற்போது வெளிநாட்டு பிரஜைகள் சட்ட பிரிவு 1946(யு பி – 14, 14 (சி ), பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடந்து வருகிறது