இலங்கை பிரதமருக்கு வாக்கு கொடுத்த பிரிட்டன்

லண்டன், மே 14- இலங்கை மக்களின் தேவைகளை நிறைவேற்ற ரணில் விக்ரமசிங்க தலைமையிலான அரசை ஊ​க்குவிக்கும் என இலங்கைக்கான பிரிட்டன் தூதரகம் தெரிவித்துள்ளது. இது குறித்து அதன் டுவிட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ள பிரிட்டன் தூதரகம், இலங்கையில் அரசியல் மற்றும் பொருளாதார ஸ்திரத்தன்மையை கட்டியெழுப்பும் நோக்கத்திற்காக ரணில் விக்ரமசிங்க தலைமையிலான அரசு செயற்பட வேண்டும் என கூறியுள்ளது. எனவே அடுத்த சில வாரங்கள் மிகவும் முக்கியமானவை என பிரிட்டன் தெரிவித்துள்ளது.