இலவச செயற்கை கருவூட்டல்

புதுடெல்லி,நவ.26- எதைத் தின்றால் பித்தம் தெளியும் என்பது போல் எதைச் சொன்னால் ஓட்டுக்கள் விடும் என்று அரசியல் கட்சிகள் பல விதமான கணக்குகளை போட்டு வருகிறது. இதன் உச்ச கட்டமாக இலவசமாக செயற்கை கருவூட்டல் சிகிச்சை அளிக்கப்படும் என்று அரசியல் கட்சிகள் வாக்குறுதிகளை அள்ளிவிட தொடங்கி உள்ளது. மக்களை உணர்ச்சி ரீதியாக கவர்ந்து வாக்குகளை பெறும் திட்டமாக இது இருந்தாலும் மருத்துவ நிபுணர்கள் இதை வரவேற்கின்றனர். நாட்டில் தற்போது மலட்டுத்தன்மை அதிகரித்து வருகிறது இதற்கு பல காரணங்கள் கூறப்படுகிறது இதனால் நாடு முழுவதும் செயற்கை கருவூட்டல் சிகிச்சை மையங்கள் புற்றிசொல்போல் அதிகரித்து உள்ளது ஆனால் இதற்கு கட்டணம் அதிகம். ஏழை எளிய மக்கள் மற்றும் பொருளாதார ரீதியாக பின்தங்கியுள்ள மக்கள் இந்த செயற்கை கருவூட்டல் சிகிச்சை மையத்திற்கு செல்ல முடியாத நிலை உள்ளது. மலட்டுத்தன்மை நீக்கப்பட்டு குழந்தை பிறக்க வேண்டும் அதே சமயத்தில் பணத்திற்கு என்ன செய்வது என்று தவியாய் தவிக்கும் மக்களின் உணர்வுகளை புரிந்து கொண்டு அவர்களுக்கு இலவசமாக செயற்கை கருவூட்டல் சிகிச்சை அளிக்கப்படும் என்று அரசியல் கட்சிகள் தற்போது கூறத் தொடங்கி உள்ளன. இதன் மூலம் மக்களை எளிதாக கவர்ந்து அவர்களின் வாக்குகளை வாங்க முடியும் என்று அரசியல் கட்சிகள் நினைக்கிறது. ராஜஸ்தான் சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு அம்மாநில காங்கிரஸ் கட்சி வெளியிட்ட தேர்தல் அறிக்கைகள் ஏழை எளிய மக்களுக்கு இலவசமாக செயற்கை கருவூட்டல் சிகிச்சை அளிக்கப்படும் என்று வாக்குறுதி அளித்தது. கோவா மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களில் ஏற்கனவே இது போன்ற இலவச சிகிச்சை திட்டம் காப்பீடு திட்டம் அமலில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

பொது சுகாதாரத்தை கருத்தில் கொண்டு உலக சுகாதாராமையம் அறிவித்துள்ளதுபடி கருச்சிதைவு, மற்றும் கருவுறாமை போன்ற காரணங்களால் பெண்களுக்கு ஏற்படும் மனஉளைச்சல் மற்றும்  பொருட்செதங்களை தவிர்க்கும் வகையில் அரசியல்  கட்சிகள் ஏற்றிக்கொண்டிருப்பதை மருத்துவர்கள் வரவேற்றுள்ளனர். ராஜஸ்தான் தேர்தல் அறிக்கையில் கரு சிதைவு மற்றும் கரு பாதிப்பு குறித்து தன்னுடைய அக்கரையை தெரிவிதிருந்தாலும் இதற்கு முன்னரே கோவா மாநிலம் நாட்டில் முதல் மாநிலமாக இந்த கரு சிதைவு மற்றும் கரு உற்பருத்தி சேவைகளை இலவசமாக செய்து தருவதாக அறிவித்திருந்தது . இந்த நிரையில் மஹாராஷ்ட்ரா மாநிலமும் மஹாத்மா புலே ஜன் ஆரோக்கிய திட்டத்தின் கீழ் மாநிலத்தின் கிராம பகுதி ஏழை பெண்களுக்கு இந்த வசதிகளுக்கு நிதி உதவி அளிப்பது மற்றும் இலவச சேவைகள் அளித்து வருகிறது. கரு சிதைவு மற்றும் கருவுறாமை என்பதை இதுவரை உலக சுகாதர மையம் தீவிரமாக எடுத்து கொள்ளாத நிலையில் தற்போது காங்கிரஸ் கட்சி இந்த விஷயத்தை தன் தேர்தல் அறிக்கையின் முக்கிய விஷயமாக கொண்டு இந்த பிரச்சனைகளுக்கு பல்வேறு சலுகைகள் அளித்திருப்பது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை கிளப்பியுள்ளது. மேலை நாடுகளில் சுகாதாரம் என்பது  தேர்தகளில் இதுவரை மிக முக்கிய அம்சமாக இருப்பினும் இந்தியாவில் இப்போது தான் கட்சிகள் ஆரோக்கியத்திற்கு முக்யத்வம் அளித்து தங்கள் தேர்தல் அறிக்கைகளை தயாரித்து வருகின்றன. இந்தியாவில் ஆறு ஜோடிக்கு ஒருவர் தாங்கள் குழந்தை பெற வாய்ப்பில்லாமல் பரிதவிக்கும் நிலையில் இவர்களுக்கு அதற்கேற்ற மருத்துவ வசதிகளை பெறுவது பொருளாதார ரீதியில் மிகவும் கடினமாக உள்ளது. இதற்கான ஐ வி எப் மருத்துவ செலவுகள் 2.5 லட்சம் முதல் 4 லட்சம் வரை ஆகின்றன.உலக சுகாதார மையத்தின் கருத்துப்படி கருவுறாமை என்பது சாமான்ய நோயாக உள்ள நிலையில் இதற்க்கு ஐ வி எப்  வைத்திய முறைகள் மிகவும் அவசியம். கருவுறுதல் , குழந்தை பிறப்பு ஆகியவை அனைத்தும் மிகவும்  பிரபலமாக தெரியவந்தாலும் கரு சிதைவு மற்றும் கருவுறாமை ஆகிய பிரச்சனைகள் இன்னும் மௌனமாகவே உள்ளன. எனவே அனைத்து விஷயங்களையும் தங்கள் தேர்தல் அறிக்கையில் தெரிவிக்கும் அரசியல் கட்சிகள் இந்த முக்கிய விஷயம் குறித்து மக்களுக்கு நம்பிக்கை அளிப்பது மிகவும் அவசியமானது. ஏனெனில் இந்த பிரச்சனைகளில் ஈடுபடும் ஏழை பெண்களுக்கு இதற்கான மருத்துவ சேவையை பெற்றுக்கொள்வது மிகவும்  செலவுகள் பிடிக்கும் வகையில் எவ்வித உதவியும் இன்றி திண்டாடி வருகின்றனர். . இந்த வகையில் முதல் முறையாக காங்கிரஸ் ராஜஸ்தான் சட்ட மன்ற தேர்தல் அறிக்கையில் இந்த பிரச்சனைகளுக்கு பெண்களுக்கு நிதி உதவி வழங்குவதாக குறிப்பிட்டுள்ளது வரவேற்கத்தக்கது என்பதே பலருடைய கருத்தாகும்.