இலவச விளம்பரம் பெறும் பிஜேபி: குமாரசாமி

பெங்களூர்: ஜூன். 21 – வேறொருவர் செய்த பணியை தங்களுடையது என்று காட்டிக்கொண்டு பிரதமர் நரேந்திர மோதி மற்றும் பாரதீய ஜனதா தலைவர்கள் இலவச விளம்பரம் பெற்று வருகிறார்கள் என முன்னாள் முதல்வர் ஹெச் டி குமாரசாமி குற்றபத்திகையை வெளியிட்டுள்ளார் . ம ஜ தா கட்சியின் மாநில தலைமை அலுவலகத்தில் இன்று செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில் மோதி பெங்களூரில் துவக்கி வைத்த திட்டங்கள் துவங்கியது பி ஜே பி ஆட்சியால் அல்ல. ஆனால் நானே துவங்குகிறேன் என்று பிரதமர் பேசி உள்ளார். இது நரேந்திர மோதியின் சாதுர்யம் . மாநிலத்திற்கு இரண்டு நாள் விஜயமாக பிரதமர் வந்திருந்தார். அவர் வருகையை முன்னிட்டு வளர்ச்சி அறிக்கை தரப்பட்டுள்ளது. 33 ஆயிரம் கோடி ருபாய் அளவிலான திட்ட பணிகளை பிரதமர் துவக்கி வைத்ததாக கூறுகிறார்கள் . மோதி தானே உருவாக்கிய திட்டங்களுக்கு துவக்க விழா நடத்தினாரா அல்லது முந்தைய அரசுகள் உருவாக்கிய திட்டங்களை துவக்கி வைத்தாரா என்பதை பி ஜே பி தலைவர்கள் மக்களுக்கு தெரிவிக்க வேண்டும். பெங்களூரு அவரால்தான் வெளிச்சம் கண்டு வருவது போல் இருந்தது பிரதமரின் பேச்சு. துணை ரயில் திட்டம் குறித்து பிரதமர் பேசியுள்ளார். 2018ல் நான் ஆட்சிக்கு வரும் வரை இந்த திட்டம் தூசி படிந்திருந்தது. நான் 14 மாதங்கள் முதல்வராக இருந்த கால கட்டத்தில் மத்திய ரயில்வே அமைச்சரை தொடர்பு கொண்டு ஆலோசனை நடத்தினேன். இதற்க்கு முன்னாள் பிரதமர் ஹெச் டி தேவேகௌடா உதவி செய்தார். 23 ஆயிரம் கோடி ருபாய் செலவில் திட்டம் தயாராகி 2018ல் ஆட்சிக்கு வந்த இரண்டே மாதங்களில் இந்த திட்டம் விஷயமாக நான் டெல்லிக்கு சென்றிருந்தேன் என ஹெச் டி குமாரசாமி தெரிவித்தார்.