இளம்பெண் மீது திராவகம் வீசிய நாகேஷுக்கு எதிராக 300 பக்க குற்றப்பத்திரிக்கை

பெங்களூர்: ஜூலை. 22 – இளம் பெண் மீது திராவகம் வீசிய காதலில் தோல்வி அடைந்த நாகேஷுக்கு எதிராக நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய 300 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகையை போலீசார் தயாரித்துள்ளனர். சுங்கதகட்டேவிலிருந்து தப்பித்து சென்று குற்றவாளி ஒளிந்திருந்த திருவண்ணாமலை உட்பட 13 இடங்களில் மகஜர் செய்திருப்பதை குற்றப்பத்திரிகையில் குறிப்பிடப்பட்டுள்ளது. முதல் குற்றப்பத்திரிகையில் 60 சாட்சிகளின் அறிக்கைகள் பதிவாகியுள்ளது. பத்து பக்கங்களில் குற்றவாளியின் ஒப்புதல் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளது. இளம் பெண் மீது வீசிய அமிலம் சல்பூரிக் அமிலம் என கண்டறியப்பட்டுள்ளது. இளம் பெண்ணின் ஆடைகள் மீது விழுந்திருந்த அமிலம் , முடிகள் , சருமம் அனைத்தின் தடவியல் சோதனை அறிக்கையில் வீசப்பட்டது சல்பூரிக் அமிலம் என உறுதி செய்யப்பட்டுள்ளது. ஒரே முறை ஒன்பது லிட்டர் அமிலத்தை வாங்கிய குற்றவாளி அரை லிட்டர் ஆசிடை பெண் மீது ஊற்றிவிட்டு மீதம் அரை லைட்டரை வீசி எறிந்துள்ளான். மீதமுள்ள எட்டு லிட்டர் அமிலம் கைப்பற்றப்பட்டுள்ளது . சி சி டி வி காட்சிகள் , போன் உரையாடல்கள் , உட்பட தொழில் ரீதியான சாட்சிகள் உட்பட வலுவான தொழில் நுட்ப சாட்சிகள் குற்றப்பத்திரிகையில் பதிவு செய்ய பட்டுள்ளன . இன்னும் இளம் பெண் உடல் நலம் தேறி வரும் நிலையில் நீதிபதியின் எதிரில் 164 அறிக்கைகள் பதிவாக உள்ளது . அதன் பின்னரே குற்றபத்த்ரிக்கை முழுவதுமாக நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படும்.