இளம் பெண்ணின் பெற்றோர் மீது காதலன் தாக்குதல்

ராய்ச்சூர், ஏப். 20:
காதல் பின்னணியில், மகளை உறவினர் வீட்டில் வைத்திருக்கும் பெற்றோரை காதலன் தாக்கிய சம்பவம் நடைபெற்றுள்ளது.
பிரணவ் மற்றும் அவரது நண்பரின் குழுவால் இளம் பெண்ணின் தந்தை ஹிரா மோகன் மண்டல் மற்றும் தாய் ஸ்ருதி மண்டல், சகோதரர் ஹேமந்து மற்றும் உறவினர் சுப்ரதோ ஆகியோர் தாக்கப்பட்டனர்.
ஹிரா மோகன் மண்டல் தனது மகள், பிரணவின் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து, தனது மகளை உறவினர் வீட்டில் தங்க வைத்துள்ளார்.
இந்த விஷயம் தெரிந்த பிரணவ், இளம் பெண்ணை ஏன் வேறு இடத்திற்கு அனுப்பினீர்கள்.
மீண்டும் ஊருக்கு அழைத்து வாருங்கள் எனக் கூறி அவரது தந்தையை தாக்கி உள்ளார். பின்னர் அவரது உறவினர்களையும் தாக்கி உள்ளார். இந்த சம்பவத்தில் தாக்கப்பட்ட இளம்பெண்ணின் தந்தை ஹீரா மோகன் மண்டல் மேல் சிகிச்சைக்காக சிந்தனூர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இளம்பெண்ணின் தாய் சிந்தனூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இது குறித்து சிந்தனூர் ஊரக காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.