இளம் பெண்ணுக்கு ஆபாச படங்கள்அனுப்பிய கேப் டிரைவருக்கு வலைவீச்சு

பெங்களூர் : அக்டோபர் . 13 – ரைட் ஷேரிங்க் ஆப் வாயிலாக கேப் புக் செய்து பின்னர் பதிவை ரத்து செய்த பெண்ணின் வாட்ஸ் அப் செயலிக்கு ஆபாச போட்டோக்கள் மற்றும் விடீயோக்களை அனுப்பிய சம்பவம் நகரின் எலக்ட்ரானிக் சிட்டி அருகில் நடந்துள்ளது . 32 வயதான பரணீதி (பெயர் மாற்றப்பட்டுள்ளது ) என்ற பெண்மணி தன்னுடைய மகளை பள்ளிக்கூடத்திலிருந்து வீட்டுக்கு அழைத்து வர கேப் ஒன்றை புக் செய்துள்ளார் . ஆனால் கேப் வருவதற்கு தாமதமானதால் இந்த பதிவை ரத்து செய்துள்ளார் . அதனால் கோபமடைந்த கேப் ஓட்டுநர் தினேஷ் என்பவன் அந்த பெண்ணின் வாட்ஸ் அப் எண்ணிற்கு ஆபாச புகைப்படங்கள் மற்றும் விடீயோக்களை அனுப்பியுள்ளான் . இதை பார்த்து அதிர்ச்சியடைந்த பெண்மணி உடனே போலீசாருக்கு புகார் அளித்துள்ளார் . இந்த புகாரின் அடிப்படியில் தற்போது போலீசார் கேப் ஓட்டுநர் தினேஷை வலை வீசி தேடி வருகின்றனர். . இந்த வழக்கின் விவரத்தின்படி புகார் அளித்துள்ள பெண்மணி மகளின் பள்ளியில் நடந்த பெற்றோர் கூட்டத்தில் கலந்து கொள்ள சென்றுள்ளார். . பின்னர் வீட்டுக்கு திரும்பும்போது மகளுக்கு நடக்க முடியவில்லை . இதனால் கேப் புக் செய்துள்ளார் . ஆனால் கேப் விரைவாக கேப் ஓட்டுநர் தான் வந்துகொண்டிருப்பதாக தெரிவித்துள்ளான் . மகள் உடனே வீட்டுக்கு போக வேண்டும் என அடம் பிடித்து அழுவதை பொறுக்க முடியாமல் அங்கே அருகிலேயயே ஆட்டோ ஒன்று கிடைத்தைதில் அதில் வீட்டுக்கு போகலாம் என மகள் அடம் பிடித்துள்ளாள் . இதனால் தான் ஏற்கெனவே புக் செய்த கேபிளை பெண்மனி ரத்து செய்துள்ளார். .இதற்காக பெண்மணியின் கணக்கிலிருந்து 60 ரூபாய் பிடித்தமாகியுள்ளது . இந்த போக்குவரத்தை ரத்து செய்த உடனேயே கேப் ஓட்டுநர் தினேஷ் போன் செய்து ஏற்கெனவே தான் ஐந்து கிலோமீட்டர் வந்துவிட்டிருப்பதாகவும் இன்னும் சிலவே நிமிடங்களில் உங்கள் இடத்திற்கு வரஇருப்பதாகவும் தன்னை தேவை இல்லாமல் தொல்லைக்கு ஆளாக்கி பயணத்தை ரத்து செய்திருப்பதாகவும் தகராறு செய்ய துவங்கியுள்ளான் . ஓட்டுனரிடம் தன் மகள் அடம் பிடித்து அழுதது குறித்தும் பெண்மணி ஓட்டுனரிடம் தெரிவித்துள்ளார் . இதற்காக பெண்மணி கேப் ஓட்டுனரிடம் மன்னிப்பும் கேட்டுள்ளார் . ஆனால் கேப் ஓட்டுநர் அடிக்கடி போன் செய்து தகராறு செய்து வந்தான் . தவிர பல பல மெசேஜ்களை அனுப்பிவந்தான் . அந்த மெசேஜ்களில் ஆபாச படங்கள் மற்றும் விடியோக்கள் இருந்தன . அவற்றை பார்த்து அதிர்ச்சியடைந்து நான் அழுது கொண்டிருந்த போது அக்கம்பக்கத்தினர் ஓட்டுனரின் போனுக்கு அழைப்பு விடுத்து அவனை திட்டினர் . இது நடந்த உடனேயே ஓட்டுநர் தன்னுடைய பதிவுகளை அழித்துள்ளான் . என பாதிக்கப்பட்ட பெண்மணி கடந்த ஆகஸ்ட்9 அன்று போலீசாருக்கு அளித்த புகாரில் தெரிவித்துள்ளார் . இப்போது போலீசார் குற்றவாளி கேப் ஓட்டுநர் தினேஷை வலை வீசி தேடி வருகின்றனர்.