
மங்களூர் : பிப்ரவரி. 24 – கடபத மீனாடியில் தாக்குதல்கள் நடத்தி இரண்டு இரண்டு பேரை பலி வாங்கிய காட்டு யானையை வனத்துறை அதிகாரிகள் நடவடிக்கையில் இறங்கி சிறைபிடிப்பதில் வெற்றியடைந்துள்ளனர்.
ஐந்து வளர்ப்பு யானைகளின் உதவியுடன் முயற்சிகள் மேற்கொண்ட வனத்துறை மருத்துவர்கள் , வன அதிகாரிகள் , ஷார்ப் ஷூட்ட்டார்கள் ஆகியோர் நடவடிக்கையில் இறங்கி கடபுத கொம்பாரு என்ற இடத்தில் காட்டு யானையை சிறைபிடித்துள்ளனர்.
மூன்று நாட்களுக்கும் மேலாக நடந்த இந்த நடவடிக்கையில் இன்று வெற்றி கிடைத்துள்ளது. கடந்த பிப்ரவரி.
20 அன்று காலை பால் கூட்டுறவு சங்கத்திற்கு சென்றுகொண்டிருந்த ரஞ்சிதா (21) மற்றும் ரமேஷ் ராய் (52) ஆகிய இருவரை காட்டு யானை தாக்கியது . இதில் ரமேஷ் ராய் அதே இடத்தில இறந்த நிலையில் ரஞ்சிதா மருத்துவமனையில் சிகிச்சைபலனின்றி இறந்துள்ளார். ஆனாலும் இந்த பகுதியில் மேலும் சில காட்டு யானைகள் சுற்றித்திரிவதாக புகார் தெரிவித்துள்ள பொது மக்கள் வனத்துறை வாகனங்கள் மீது கல் வீசி தாக்குதல்கள் நடத்தியுள்ளனர்.
யானையை பிடிக்கும் நடவடிக்கையில் இருந்த வனத்துறை அதிகாரிகளின் வாகனங்கள் மற்றும் போலீஸ் துறையின் வாகணங்கள் மீது கல் வீசி தாக்கிய கிராமத்தார் வெறும் ஒரு யானையை மட்டுமே சிறைபிடித்துள்ளீர்கள் என எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். அந்த சமயத்தில் வனத்துறையினர் இந்த நடவடிக்கை இன்றோடு முடிய வில்லை நாளை மீண்டும் வருவோம் என நம்பிக்கை அளித்தனர்.
கிராமத்தாரின் இந்த கல் வீச்சு விவகாரத்தால் இரண்டு போலீஸ் ஜீப் , வனத்துறைக்கு சொந்தமான ஜீப் , ரேஞ்சர் ஒருவரின் வாகனம் ஆகியவை சேதமடைந்துள்ளன.