இளம் பெண் தற்கொலை – கணவன் மாமனார் மாமியார் மீது போலீசில் புகார்

பெங்களூர், மே 18- 31 வயது கடுப பெண் ஒருவர் நகரின் மேற்கு பகுதியில் உள்ள தன் வீட்டில் வியாழக்கிழமை மாலை இறந்து கிடந்தார். இறந்து போன சந்தியாவின் குடும்பத்தார் தங்கள் மகளின் சாவுக்கு அவளுடைய கணவன் மற்றும் குடும்பத்தார் கொடுத்த உடல் மற்றும் மனவியல் கொடுமைகள் காரணம் என குற்றம்சாட்டியுள்ளனர்.போலீஸ் கூறியபடி கடந்த வியாழக்கிழமை இரவு 9 முதல் 9.30 மணியளவில் சந்தியா மின்விசிறியில் தூக்கு மாட்டி தற்கொலை செய்துகொண்டுள்ளார். ஒரு துணியை மின்விசிறியில் கட்டி இவர் தூக்கு மாட்டிக்கொண்டுள்ளார். இந்த தற்கொலை குறித்து சந்தியாவின் கணவன் , ஜெயப்ரகாஷ் , மாமனார் முருகன் மாமியார் ராஜேஸ்வரி மற்றும் மேலும் இரண்டு பேருக்கு எதிராக சந்தியாவின் தந்தை கந்தன் பசவேஸ்வர nagar போலீஸ் நிலையத்தில் நேற்று புகார் அளித்துள்ளார். தன்னுடைய புகாரில் தன் மகள் சந்தியாவை இவர்கள் உடல் ரீதியாகவும் மனவியல் ரீதியாகவும் துன்புறுத்தியிருப்பதாக குற்றம் சாட்டியுள்ளார். சந்தியாவின் தந்தை கந்தன் தெரிவித்தபடி சந்தியா ஜெயப்ரகாஷை கடந்த 2019ம் ஆண்டு செப்டெம்பர் மாதம் திருமணம் செய்து கொண்டார். ஒரு கல்யாண தரகர் வாயிலாக இந்த வரன் கிடைத்தது . முதல் ஆறு மாதத்திற்கு அனைத்தும் சரியாகவே இருந்தது. ஆனால் தற்போது நான்கு வயதுள்ள ஆண் மகனை சந்தியா ஈன்றதிலிருந்து பிரச்சனைகள் துவங்கியது. இந்த சிறுவனுக்கு பேச்சு குறைபாடு உள்ளது. சந்தியாவின் மாமியார் ராஜேஸ்வரியின் பேச்சை கேட்டு அவளுடைய கணவன் சந்தியாவை துன்புறுத்திவந்துள்ளான். இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் சந்தியாவிற்கு கருச்சிதைவு ஏற்பட்டது . பின்னர் சந்தியாவின் உடல் பருமனானது . இதை வைத்து கணவன் அவளை தன்னுடைய வாழ்க்கையே அவளுடைய பருமனான உடலால் பாழானது என திட்டி வந்துள்ளான். கடந்த வியாழக்கிழமை 8.30 மணிக்கு ஜெயப்ரகாஷ் எனக்கு போன் செய்து சந்தியாவை அழைத்து செல்லுமாறு கூறினான். நான் முருகனை ஜெயப்ரகாஷ் வீட்டுக்கு அனுப்பி அங்குள்ள நிலைமை பற்றி தெரிவிக்குமாறு கூறினேன். 9.55 மணிக்கு முருகன் எனக்கு போன் செய்து சந்தியா இறந்து விட்டதாக தெரிவித்தான். சந்தியாவின் உடல் ராஜராஜேஸ்வரி நகரில் ஒரு மருத்துவமனையில் இருந்தது. இவ்வாறு சந்தியாவின் தந்தை கந்தன் தெரிவித்தார். இப்போது பசவேஸ்வரங்கர் போலீசார் தற்கொலைக்கு தூண்டுதல் மற்றும் கணவன் மற்றும் கணவனின் உறவினர் ஒரு பெண்ணை துன்புறுத்தல் ஆகிய பிரிவுகளில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்துள்ளனர். சந்தியாவின் தந்தை கொடுத்துள்ள புகாரின்படி விசாரணை நடந்து வருவதாக போலீசார் தெரிவித்தனர்.