இளம் பெண் தற்கொலை: கணவர், மாமனார் கைது

திருப்பூர்: ஜூலை 1 -கணவர் குடும்​பத்​தினர் சித்​ர​வதை செய்​த​தாக வாட்​ஸ்​அப்​பில் தந்​தைக்கு ஆடியோ அனுப்​பி​விட்​டு, காரில் இளம்​பெண் விஷமருந்தி தற்கொலை செய்து கொண்ட சம்​பவம் தமிழகம் முழு​வதும் அதிர்ச்​சியை ஏற்​படுத்​தி​யுள்ள நிலை​யில், அவரது கணவர், மாம​னார் கைது செய்​யப்​பட்​டுள்​ளனர். மேலும், இது தொடர்​பாக கோட்​டாட்​சி​யர் தீவிர விசா​ரணை நடத்தி வரு​கிறார்.
திருப்​பூர் மாவட்​டம் அவி​நாசி கைகாட்​டிபுதூர் ஜெயம் கார்​டன் பகு​தி​யைச் சேர்ந்​தவர் கவின்​குமார். இவரது மனைவி ரிதன்யா (27). இவர்​களுக்கு கடந்த 3 மாதங்​களுக்கு முன் திரு​மணம் நடை​பெற்​றது. இந்​நிலை​யில், கடந்த 28-ம் தேதி மொண்​டி​பாளை​யம் அருகே காரில் விஷமருந்தி ரிதன்யா தற்​கொலை செய்து கொண்​டார்.
இறப்​ப​தற்கு முன்​பாக ரிதன்யா தனது தந்​தைக்கு அனுப்​பிய வாட்​ஸ்​அப் ஆடியோ பதி​வில், “நான் தற்​கொலை செய்து கொள்​வதற்கு காரணம் திருமண வாழ்க்​கை​தான். கணவர் கவின்​கு​மார், மாம​னார் ஈஸ்​வரமூர்த்​தி, மாமி​யார் சித்​ராதேவி ஆகியோர்​தான் தற்​கொலைக்கு காரணம்” என்று தெரி​வித்​திருந்​தார்.
அவி​நாசி அரசு மருத்​து​மனை​யில் நேற்று முன்​தினம் ரிதன்​யா​வின் சடலம் பிரேதப் பரிசோதனைக்கு வைக்​கப்​பட்ட நிலை​யில், அங்கு வந்த கவின்​கு​மார் மற்​றும் அவரது குடும்​பத்​தினரை ரிதன்​யா​வின் உறவினர்​கள் முற்​றுகை​யிட்​டு, தாக்க முயன்​றனர். அவர்​களை போலீ​ஸார் மீட்​டு, அங்​கிருந்து அனுப்பி​வைத்​தனர்.இந்​நிலை​யில், ரிதன்​யாவை துன்​புறுத்​தி, தற்​கொலைக்கு தூண்​டிய​தாக சேவூர் போலீ​ஸார் வழக்கு பதிவு செய்​து, கணவர் கவின்​கு​மார், மாம​னார் ஈஸ்​வரமூர்த்தி ஆகியோரைக் கைது செய்​தனர்.