இளைஞன் சாவு

சிக்கமகளூர் : செப்டம்பர். 11 – விழா கொண்டாட்டம் மற்றும் உற்சாகத்தில் நடந்த எருது போட்டியில் மூச்சிரைத்தது இளைஞன் ஒருவன் சம்பவ இடத்திலேயே இறந்துள்ள சம்பவம் அஜ்ஜண்புரா நகரில் நடந்துள்ளது. இந்த விபத்தில் உயிரிழந்தவன் பரத் (25) என தெரியவந்துள்ளது. அஜ்ஜன்புரா நகரில் ஜோடி எருது வண்டிகள் ஓட்ட போட்டிகள் நடந்த போது கடைசி போட்டியின்போது அஜ்ஜன்புராவை சேர்ந்த பரத் எருது போட்டிகளின் கடைசி இடத்திற்கு வரும்போது எருது வண்டி எல்லை கோடை தாண்டியபின்னர் அதன் மூக்குக்கயிற்றை பிடித்து நிறுத்த முயற்சித்துள்ளான் . அப்போது எருதுகளை தடுத்து நிறுத்த முயன்றதில் எருதுகள் தாக்கியதில் இளைஞனுக்கு தலையில் காயங்கள் ஏற்பட்டு ரத்தம் கசிந்த நிலையில் உடனே விழா ஏற்பாட்டாளர்கள் அவனை மருத்துமனைக்கு எடுத்து சென்றும் சிகிச்சை பலனளிக்காமல் பரத் இறந்துள்ளான். இந்த சம்பவம் குறித்து அஜ்ஜம்புரா போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.