பெலகாவி : ஆகஸ்ட்.- 31 – பின்னால் பின்தொடர்ந்து வந்த மூன்று பேர் நடு வீதியில் இளைஞன் ஒருவனை கொடூரமாக கொலை செய்துள்ள சம்பவம் சிவபசவநகரில் நடந்துள்ளது. ராமநகரை சேர்ந்த நாகராஜ் காடிவடடர் (26) என்பவர் கொலையுண்ட இளைஞனாவார். இவரை மோட்டார் சைக்கிளில் பின் தொடர்ந்து வந்த மூன்று பேர் இவரை தடுத்து நிறுத்தி கல்லால் தாக்கி கொடூரமாக கொலை செய்துள்ளனர். கொலை செய்தபின்னர் மூன்று பேரும் வெவ்வேறு மார்கத்தில் தப்பியோடியுள்ளனர். நாகராஜை கொலை செய்த காட்சிகள் அருகில் இருந்த கடையில் உள்ள சி சி டி வி காமிராக்களில் பதிவாகியுள்ளது. இளைஞன் சென்ற பாதையில் குற்றவாளிகள் முதலே பைக்கில் வந்து நின்றிருந்தனர் . நடந்து கொண்டு வந்த நாகராஜை அருகில் வந்த பின்னர் மூன்றுபேரும் தாக்கியுள்ளனர். மோட்டார் சைக்கிளில் வந்த மூன்று பேரில் மத்தியில் உற்கார்ந்திருந்தவன் நாகராஜை தாக்கியுள்ளான் . நாகராஜை ஐந்தாறு முறை கல்லால் தாக்கி கொலை செய்துவிட்டு தப்பியோடியுள்ளனர். இந்த கொலை குறித்து தகவல் அறிந்த உடனேயே சம்பவ இடத்திற்கு வந்த டி சி பி சேகர் மற்றும் ஏ சி பி கட்டிமணி ஆகியோர் வந்து மேற்பார்வையிட்டுள்ளனர். இந்த கொலை குறித்து மாலமாருதி போலீஸ் நிலையத்தில் வழக்கு பதிவாகியுள்ளது. சம்பவ இடத்திற்கு வந்த புலனாய்வு துறையினர்மற்றும் கை ரேகை நிபுணர்கள் ஆய்வு மேற்கொண்டுள்ளனர்.பின்னர் இறந்த நாகராஜின் உடல் உடற்கூறு சோதைக்காக பிம்ஸ் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது . போலீசார் தற்போது இந்த கொலை விவகாரம் குறித்து தீவிர விசாரணை நடத்திவருவதுடன் கொலையாளிகளை தேடி வருகின்றனர்.