இளைஞர்களை ஏமாற்றி மிரட்டி பணம் பறித்து வந்த 2 பேர் கைது

பெங்களூரு, ஆக. 28- டேட்டிங் ஆப்பில் பெண்களைத் தேடும் இளைஞர்களை குறி வைத்து. அவர்களை ஏமாற்றி கத்தி முறையில் பணம் பறித்த 2 பேரை எச்எஸ்ஆர் லே அவுட் போலீசார் கைது செய்து உள்ளனர்.இது பற்றிய விபரம் வருமாறு.
நதீம் பாஷா மற்றும் நாகேஷ். ஆகிய இருவர் டேட்டிங் ஆப் செயலியில் அழகான இளம் பெண்களின் புகைப்படங்களை பதிவேற்றம் செய்து போலி கணக்குகள் தொடங்கி இளம் பெண்கள் போல் மெசேஜ் அனுப்பி இளைஞர்களை வசியப்படுத்துவர். இந்த டேட்டிங் ஆப்பிள் இருப்பது இளம் பெண் தான் என்று நம்பி வியாபாரம் இளைஞர்களை குறிப்பிட்ட இடத்திற்கு வரவைத்து அவர்கள் ஆசை ஆசை வரும் போது அவர்களைப் பிடித்து கத்தி முனையில் மிரட்டி பணம் நகைகளை பறித்து செல்வதை வழக்கமாக கொண்டு இருந்தனர். சில நேரங்களில் இளைஞர்களை ஆட்டோவில் கடத்தி சென்று
பணம், நகைகளை பறித்து, கணக்கில் இருந்து பணம் எடுப்பது வழக்கம். மேலும், நண்பர்களுக்கு போன் செய்து கூகுள் பே மற்றும் போன் பே போன்றவற்றை செய்யச் சொல்லி அதன் மூலமும் பணத்தை கரந்தனர். இவ்வாறு இவர்கள் செயலியில் பெண்களின் படத்தை போலியாக வைத்து அதன் மூலம் சுமார் 15க்கும் மேற்பட்ட இளைஞர்களை ஏமாற்றி பணம் பறித்தது தெரியவநதது
. சமீபத்தில், குற்றம் சாட்டப்பட்டவர், எச்எஸ்ஆர் லேஅவுட் பகுதியில் ஒரு இளைஞரை அழைத்து 60,000 பணம் பறித்துள்ளார். இச்சம்பவம் தொடர்பாக அளித்த புகாரின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு இரண்டு குற்றவாளிகள் கைது செய்யப்பட்டதாக டிசிபி சிகே பாபா தெரிவித்தார்.