இளைஞர் தற்கொலை

பெங்களூர்: ஜூன். 7 – இளம்பெண் திருமணத்திற்கு மறுத்ததால் மனம் நொந்த இளைஞன் ஒருவன் தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் வித்யாரண்யபுராவில் உள்ள சாமுண்டேஸ்வரி லே அவுட்டில் நடந்துள்ளது. இந்த லே அவுட்டில் வசித்து வந்த சரண் (25) தற்கொலை செய்து கொண்ட இளைஞன் ஆவான். கடந்த ஐந்து வருடங்களாக இளம்பெண் ஒருவளை சரண் காதலித்து வந்ததுடன் பின்னர் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்து இந்த இளம் ஜோடி தர்மஸ்தலாவிற்கு  சென்றுள்ளனர். ஆனால் கடைசி நேரத்தில் இளம் பெண் திருமணம் சரணை திருமணம் செய்து கொள்ள மறுத்துள்ளாள். இதனால் மனம் நொந்த சரண் வீட்டில் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டுள்ளான் . இது குறித்து வித்யாரண்யபுரா போலீசார் வழக்கு பதிவு சேது அடுத்த கட்ட விசாரணையை துவங்கியுள்ளனர்.