இஸ்ரேல் குண்டு வீச்சு: 700-க்கும் மேற்பட்ட பாலஸ்தீனர்கள் உயிரிழப்பு

காசா: அக்டோபர். 26 -ஹமாஸ் தீவிரவாதிகள், கடந்த 7-ம் தேதி காசா எல்லையை கடந்து இஸ்ரேலில் புகுந்து தாக்குதல் நடத்தினர்.
இதில் இஸ்ரேலியர்கள் 1,400 பேர் உயிரிழந்தனர்.
இதற்கு பதிலடியாக காசாவின் வடக்கு பகுதியில் இஸ்ரேல் குண்டு வீச்சு தாக்குதல் நடத்தியது.
கடந்த 2 வாரங்களாக தொடரும் தாக்குதலில் கடந்த திங்கள்கிழமை மட்டும் ஹமாஸ் தீவிரவாதிகளின் 400 இலக்குகளை குறிவைத்து இஸ்ரேல் பயங்கர தாக்குதல் நடத்தியது. இதில் பாலஸ்தீனர்கள் 700-க்கும் மேற்பட்டோர் ஒரே நாளில் உயிரிழந்ததாக காசா சுகாதாரத்துறை செய்தி தொடர்பாளர் அஷ்ரப் அல்-கித்ரா தெரிவித்துள்ளார்.காசாவில் கடந்த 2 வாரங்களில், திங்கள் கிழமை தான் மிக அதிகளவில் உயிரிழப்பு ஏற்பட்டது எனவும் அவர் கூறியுள்ளார். இஸ்ரேல் தாக்குதல் நடத்தியதில் இருந்து தற்போது வரை, காசாவில் 2,360 குழந்தைகள் உட்பட 5,791 பேர் உயிரிழந்துள்ளனர். காசாவில் போரால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மனிதாபிமான உதவிகளை செய்ய முடியவில்லை என்று அவர் தெரிவித்தார்.