இஸ்ரேல் பிரதமருக்கு மோடி வாழ்த்து

புதுடெல்லி,ஜன.12-தேர்தலில் நேதன்யாகு தலைமையிலான வலதுசாரி கூட்டணி 64 இடங்களைப் பிடித்து ஆட்சி அமைத்தது. தொடர்ந்து நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற்றதையடுத்து, இஸ்ரேல் பிரதமராக 6-வது முறையாக பெஞ்சமின் நேதன்யாகு பதவியேற்றுக் கொண்டார். இந்நிலையில், இஸ்ரேல் பிரதமராக நேதன்யாகு பொறுப்பேற்றதற்கு பிரதமர் நரேந்திர மோடி தொலைபேசி வாயிலாக வாழ்த்து தெரிவித்தார். இதுதொடர்பாக பிரதமர் அலுவலகம் வெளியிட்ட டுவிட்டர் செய்தியில், தனது நல்ல நண்பருடன் பேசுவதில் மகிழ்ச்சியாக இருந்தது. நேதன்யாகுவின் அற்புதமான தேர்தல் வெற்றிக்காகவும், ஆறாவது முறையாக பிரதமரானதற்காகவும் பிரதமர் மோடி அவரை வாழ்த்தினார். இந்தியா, இஸ்ரேல் மூலோபாய கூட்டாண்மையை ஒன்றாக முன்னேற்றுவதற்கு மற்றொரு வாய்ப்பு கிடைத்ததில் மகிழ்ச்சி என இஸ்ரேல் பிரதமர் தெரிவித்தார் என பதிவிட்டுள்ளது.

https://www.maalaimalar.com/news/national/tamil-news-prime-minister-modi-tour-canceled-suddenly-559790?infinitescroll=1