இஸ்ரோவின் ககன்யான் திட்டம் 2024ல் செயல்படுத்தப்படும்

புதுடெல்லி, செப்.14 –
மத்திய விண்வெளி மற்றும் புவி அறிவியல் துறை இணை மந்திரியும், பா.ஜ.க.வைச் சேர்ந்தவருமான ஜிதேந்திர சிங் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது: இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையமான இஸ்ரோவின் கனவு திட்டங்களில் ஒன்று மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பும் ககன்யான் திட்டம். 10 ஆயிரம் கோடி ரூபாய் செலவிலான இந்தத் திட்டத்தைச் செயல்படுத்துவது குறித்து பிரதமர் மோடி 2018-ல் தன் சுதந்திர தின உரையின்போது தெரிவித்தார். தற்போது முழு வீச்சில் இந்தத் திட்டத்தை செயல்படுத்துவதற்கான நடவடிக்கைகள் தொடங்கி உள்ளன.
இதற்கான சோதனை ஓட்டம் இந்தாண்டுக்குள் நடத்தி முடிக்கப்படும். இதைத் தொடர்ந்து வரும் 2024-ல் ககன்யான் திட்டம் வெற்றிகரமாக செயல்படுத்தப்படும் என தெரிவித்தார்