இஸ்லாமியர்களுக்கு ஆதரவு அளிக்க மாட்டார்கள்- ஓவைசி பேச்சு

மும்பை, பிப். 27-
உத்தவ் தாக்கரே, சரத்பவார் தேவையான நேரத்தில் இஸ்லாமியர்களுக்கு ஆதரவு அளிக்க மாட்டார்கள் என எம்.ஐ.எம். கட்சி தலைவர் ஓவைசி கூறியுள்ளார். ஆதரவு அளிக்க மாட்டார்கள் எம்.ஐ.எம். கட்சியின் பொதுக்கூட்டம் தானே மாவட்டம் மும்ரா பகுதியில் நேற்று நடந்தது. கூட்டத்தில் பேசிய கட்சியின் தலைவர் ஓவைசி உத்தவ் தாக்கரே, சரத்பவார் போன்றவர்கள் தேவையான நேரத்தில் இஸ்லாமியர்களுக்கு ஆதரவாக இருக்க மாட்டார்கள் என கூறினார். மேலும் அவர் பேசியதாவது:- அஜித்பவார், சுப்ரியா சுலே, சரத்பவார், உத்தவ் தாக்கரே, ஏக்நாத் ஷிண்டே மற்றும் தேவேந்திர பட்னாவிசால் தலைவராக முடியும் போது, உங்களால் ஏன் முடியாது?. எம்.ஐ.எம். கட்சி 65 ஆண்டுகளுக்கு முன் தொடங்கப்பட்டது. அப்போது கட்சி கூட்டங்களில் குறைவான மக்களே கலந்து கொள்வார்கள். தற்போது ஆயிரக்கணக்கான மக்கள் கட்சி கூட்டத்தில் கலந்து கொள்கின்றனர். நாடாளுமன்றம், சட்டமன்றம், உள்ளாட்சி அமைப்புகளில் நமது கட்சியினர் உள்ளனர். இந்த வளர்ச்சி தொடர வேண்டும். இளைஞர்கள் நிர்வாகத்திற்குள்ளும் நுழைய முயற்சி செய்ய வேண்டும். தேர்தல் மூலமாகவும் நிர்வாகத்துக்குள் செல்ல வேண்டும்.
இஸ்லாமியர்கள், தலித்துகளுக்காக போராட இளைஞர்கள் எம்.ஐ.எம். கட்சியை பலப்படுத்த வேண்டும்.
நமது மதத்தினருக்கு எதிரான சம்பவங்கள் நடந்த போது உத்தவ் தாக்கரே ஏன் அமைதியாக இருந்தார். சரத்பவார் பிரதமர் மோடியை ேதாற்கடிக்க விரும்புகிறார். அதற்காக அவருக்கு நமது ஆதரவு தேவைப்படுகிறது.