ஈட்டி எறிதலில் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்ற இந்தியாவின் நீரஜ் சோப்ரா

ஓரிகான்: ஜூலை. 22 – அமெரிக்காவில் நடைபெற்று வரும் உலக தடகள போட்டியில் எதிர்பார்த்ததை போன்றே இந்தியாவின் நீரஜ் சோப்ரா ஈட்டி எறிதலில் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார். அமெரிக்காவின் ஓரிகான் நகரில் நடைபெற்று வரும் உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டி தொடர் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. இத்தொடரில் இந்தியாவில் இருந்து 22 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றாலும் ஹரியானாவைச் சேர்ந்த எட்டி எறிதல் நாயகன் நீரஜ் சோப்ரா மீது அதிக எதிர்பார்ப்பு நிலவுகிறது. ஒலிம்பிக்கில் தங்கம் வென்றதால் உலக போட்டியிலும் அவரது திறமையை காண ரசிகர்கள் ஆவல் கொண்டுள்ளனர்.
அதனை உறுதி செய்யும் விதமாக இன்று காலை நடைபெற்ற தகுதிப் போட்டியில் தனது முதல் வாய்ப்பிலேயே அதற்கான தகுதியை எட்டினார். 88.39 மீட்டர் தூரம் அவர் ஈட்டியை விளாசி சக வீரர்களை மிரட்டியுள்ளார். இந்திய நேரப்படி வரும் ஞாயிற்றுகிழமை காலை இறுதிப் போட்டி நடக்கிறது. அதில் நீரஜ் சோப்ரா முதல் இடத்தை பிடித்தால் 39 ஆண்டு இந்திய வரலாற்றில் தங்கம் வென்ற முதல் வீரர் என்று சரித்திரத்தை அவர் பதிவு செய்வார்.