ஈரோடு: காங்கிரஸ் அமோக வெற்றி

ஈரோடு,மார்ச் 2-
ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதியில் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் இ பி கே எஸ் இளங்கோவன் வரலாறு காணாத வெற்றியை பதிவு செய்ய உள்ளார். இங்கு போட்டியிட்ட அதிமுக மற்றும் நாம் தமிழர் முழித்த கட்சிகளுக்கு பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. இன்று காலை 11:30 மணி நிலவரப்படி காங்கிரஸ் கட்சி வேட்பாளர் இ வி கே எஸ் இளங்கோவன் 39 ஆயிரத்து 875 வாக்குகள் பெற்று இருந்தால்வாக்குகள் பெற்றிருந்தார். இவரை எதிர்த்து போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் தென்னரசு 15 ஆயிரத்து335 வாக்குகளும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மேனகா 2 ஆயிரத்து488 வாக்குகளும் பெற்று இருந்தனர்.
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வாக்குப்பதிவு கடந்த மாதம் 27-ம் தேதி நடந்தது. இத்தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன், அதிமுக வேட்பாளர் கே.எஸ்.தென்னரசு, தேமுதிக வேட்பாளர் ஆனந்த், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மேனகா நவநீதன் உள்ளிட்ட 77 பேர் போட்டியிட்டனர்.
இந்த தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி இன்று (மார்ச் 2)காலை 8 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது. மொத்தம் 16 மேஜைகளில் வாக்குகள் எண்ணப்படுகின்றன. இந்நிலையில், 2 சுற்றுகள் வாக்கு எண்ணிக்கை நிறைவு பெற்ற நிலையில் 3வது சுற்று வாக்கு எண்ணிக்கை நிறுத்தப்பட்டது. இதனைத் தொடர்ந்து, முதல் சுற்று முடிவுகளை அதிகாரபூர்வமாக அறிவித்த பிறகு 3 வது சுற்று வாக்கு எண்ணிக்கை தொடங்கும் என்று மாவட்ட தேர்தல் அலுவலர் கிருஷ்ணனுண்ணி தெரிவித்தார்.
இந்நிலையில், வாக்கு எண்ணிக்கை முடிவுகளை தேர்தல் ஆணையம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. இதன்படி, ஈவிகேஎஸ் இளங்கோவன் 8429 வாக்குகள் பெற்றுள்ளார். அதிமுக வேட்பாளர் தென்னரசு 2873 வாக்குகள் பெற்றுள்ளார்.
ஈரோடு கிழக்கில் வெற்றி வித்தியாசம் அதிகரிக்கக்கூடும் என எதிர்க்கபார்க்கப்படுகிறது. ஈரோடு கிழக்கில் 2011ல் நடைபெற்ற தேர்தலில் தேமுதிக வேட்பாளர் சந்திரகுமார் 10,866 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருந்தார். ஈரோடு கிழக்கில் 2016ல் நடைபெற்ற தேர்தலில் அதிமுகவின் தென்னரசு 7,794 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருந்தார். ஈரோடு கிழக்கில் 2011ல் நடந்த தேர்தலில் காங்கிரசின் திருமகன் ஈவெரா 9,904 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருந்தார். தற்போதைய இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளரை விட காங்கிரஸ் வேட்பாளர் 16 ஆயிரத்திற்கும் அதிகமான வாக்குகளை பெற்றுள்ளார்.
இதன் மூலம் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் வெற்றி வித்தியாசம் அதிகரிக்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனிடையே, ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலின் முதல் சுற்று முடிவுகளை தேர்தல் ஆணையம் அதிகாரபூர்வமாக வெளியிட்டது. முதல் சுற்றில் காங்கிரஸ் 8429, அதிமுக 2873, நாம் தமிழர் 526, தேமுதிக 112 வாக்குகள் பெற்றுள்ளன. முதல் சுற்றில் தேமுதிக வேட்பாளரை விட சுயேட்சை அதிக ஓட்டு பெற்றுள்ளார். முதல் சுற்றில் தேமுதிகவின் ஆனந்த் 112 வாக்கு பெற்ற நிலையில் சுயேச்சை முத்துபாவா 178 வாக்கு பெற்றார்.
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் 2 சுற்று வாக்கு எண்ணிக்கை நிறைவடைந்து தற்போது 3வது சுற்று வாக்கு எண்ணிக்கை தொடங்கியுள்ளது. முதல்சுற்று முடிவு அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து 3வது சுற்று வாக்கு எண்ணிக்கை துவங்கியது. காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் தற்போது 24812 வாக்குகள் பெற்று முன்னிலையில் உள்ளார். அதிமுக 8128, நாம் தமிழர் கட்சி 1479, தேமுதிக 123, பிற கட்சிகள் 112 வாக்குகள் பெற்றுள்ளது.