ஈஸ்வரப்பா வீட்டை முற்றுகையிட்ட காங்கிரஸ் தொண்டர்கள் கைது

பெங்களூர் : பிப்ரவரி . 10 – பாராளுமன்ற உறுப்பினர் டி கே சுரேஷ் மற்றும் வினய் குல்கர்னி ஆகியோரை சுட்டு கொள்ள வேண்டும் என கூறிய பி ஜே பி மூத்த தலைவர் கே எஸ் ஈஸ்வரபாவுக்கு எதிராக ராஜ ராஜேஸ்வரி நகர் காங்கிரஸ் கட்சி தலைவர் சஷாங்க் மற்றும் சஞ்சய் ஆகியோர் எசவந்தபுர போலீஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். பயங்கரவாத தடுப்பு சட்டத்தின் கீழ் புகாரை பதிவு செய்யுமாறு இவர்கள் வற்புறுத்தியுள்ளார். கே எஸ் ஈஸ்வரபாவின் பேச்சை கண்டித்து நேற்று தாவணகெரே போலீஸ் நிலையத்தில் வழக்கு பதிவாகியுள்ள நிலையில் இது குறித்து முதல் தகவல் அறிக்கையும் பதிவாகியுள்ளது.இது விஷயமாக தற்போது தாவணகெரே போலீசார் ஈஸ்வரபாவுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளனர். தவிர சிவமொக்கா மல்லேஸ்வர லே அவுட்டில் உள்ள ஈஸ்வரப்பா வீட்டிற்கும் போலீசார் நேரில் சென்று விசாரணை மேற்கொண்டுள்ளனர். தவிர நகரின் சக்ரவர்த்தி லே அவுட்டில் உள்ள ஈஸ்வரப்பா வீட்டை காங்கிரஸ் தொண்டர்கள் முற்றுகையிட முயற்சித்த நிலையில் போலீசார் அவர்களை தடுத்து கைது செய்து அவருடைய வீட்டுக்கு போலீஸ் பாதுகாப்பை அதிகரித்துள்ளனர். இதற்கிடையில் ஈஸ்வரப்பாவின் பேச்சு விவகாரமாக மாவட்டத்தின் ஹரிஹரா தாலூகாவின் ராஜனஹள்ளி கிராமத்தில் செய்தியாளர்களிடம் பேசிய மாநில உள்துறை அமைச்சர் முனைவர் ஜி பரமேஸ்வரா சுட்டு கொள்ளவேண்டும் என பேசியுள்ள ஈஸ்வரப்பாவுக்கு எதிராக முதல் தகவல் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. முன்னாள் அமைச்சர் ஈஸ்வரப்பாவுக்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும். சட்டத்தை மீறி யாரும் பேச கூடாது . என தெரிவித்துள்ளார். இதற்க்கு முன்னர் ஈஸ்வரப்பா ஒரு நிகழ்ச்சியில் பேசுகையில் டி கே சுரேஷ் மற்றும் வினை குல்கர்னி போன்ற தேச விரோதிகளை சுட்டு கொள்ளும் சட்டம் கொண்டுவருமாறு மோதியை வற்புறுத்தியிருப்பதுடன் நாங்கள் இதை சும்மாய் விட மாட்டோம். நாங்கள் பி ஜே பியை சேர்ந்தவர்கள். பாகிஸ்தானை இந்தியாவுடன் இணைத்து பரந்த பாரதம் ஆக்குவோம் என கூறியுள்ளார்.